டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல்
16 Feb 2026, 2:37 pm
<p><strong>டாஸ்மாக் கடையை மூடக்கோரி மறியல் </strong></p>
<p>காஞ்சிபுரம், பிப்,16- காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பேடு முதல் சக்தி நகர் செல்லும் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள தனியார் மதுபான கடையை மூடக்கோரி திங்களன்று (பிப். 16) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்கள் பங்கேற்புடன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே உள்ள மதுபான கடை களை அகற்றக் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிய கடைக்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து புதுப்பேடு கூட்ரோட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ்நாடு வாணிபக் கழகத் துணை ஆணையர் திரு வாசகம் நடத்திய பேச்சுவார்த்தையில், புதிய கடையை மூட உத்தரவாதம் அளிக்காததால் ஆத்திரமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். இதில் சிபிஎம் வட்டக் குழு உறுப்பி னர்கள் விஜயகுமார் காமாட்சி, எம்.எஸ்.ராஜா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட நிலையில், மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.</p>
