உச்சிமலை குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்
11 Dec 2025, 5:47 pm
<p><strong>உச்சிமலை குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச.11- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா உச்சி மலை குப்பம் கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஎம் சார்பில் நடைபெற்ற இந்த போராட் டத்திற்கு கிளைச் செய லாளர் மாது தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.லட்சுமணன், தாலுகா செயலாளர் பி. கணபதி, இடைக்குழு உறுப்பினர் கண்ணன், நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உச்சிமலை குப்பம் பகுதியில் பேருந்துகள் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும், விண்ண வனூர் உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், ரேசன் கடையில் பழு தடைந்துள்ள கட்டிடத்தை இடித்து புதிதாக ரேசன் கடை அமைத்து தர வேண்டும், வீட்டுமனை பட்டா இல்லாத அனை வருக்கும் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது.</p>
