கிராம வங்கி அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
7 Aug 2026, 11:36 pm

கிராம வங்கி அதிகாரிகளை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஆக.7 -தமிழ்நாடு கிராம வங்கியின் ஆறுமுகநேரி கிளையில் பணியாற்றி வந்த கிளை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் ஆகியோர் அலுவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் , தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்துகடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம வங்கி ஆபீசர்ஸ் அசோசியேஷன் தலைவர் அண்டோ கால்பர்ட்தலைமை வகித்தார். தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் லட்சுமி நாராயணன், தமிழ்நாடு கிராம வங்கிஆபீசர்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் அறிவுடை நம்பி, தமிழ்நாடு கிராம வங்கி யூனியன் நிர்வாகி அஸ்வத், தமிழ்நாடுகிராம வங்கி ஓய்வுபெற்றோர் சங்க பொதுச் செயலாளர் சோலை மாணிக்கம், பெபி (BEFI) மாநில நிர்வாகி சிவசங்கரன்உள்ளிட்டோர் கண்டனஉரையாற்றினர்.

அலுவல் பணியில் ஈடுபடும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டது.