வாலிபர் சங்க கொடியை திருடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்
11 Feb 2026, 5:52 pm
<p><strong>வாலிபர் சங்க கொடியை திருடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாகப்பட்டினம், பிப்.11 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் ஏற்றப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கொடியினை திருடிச் சென்றவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க கோரி, கிளைத் தலைவர் வி. செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஆர். அறிவழகன் வரவேற்றார். துணைத் தலைவர் டி.விக் னேஷ், துணைச் செயலாளர் ஆர். ராஜ சேகரன் முன்னிலை வகிக்தனர். மாவட்டத் தலைவர் எம். ஜோதிபாசு, ஒன்றியச் செய லாளர் சி. பாலசுந்தரம் உள்ளிட்டோர் உரை யாற்றினர். சகோதார அமைப்புகளின் நிர்வா கிகள், பிரதிநிதிகள், வாலிபர் சங்க பொறுப்பா ளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வாய்மேடு பவர் ஹவுஸ் பகுதியில் கண்காணிப்பு கேமராவும், உயர்கோபுர மின்விளக்கும் அமைத்திட கோரிக்கை வைக்கப்பட்டது.</p>
