தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏல சீட்டு நடத்தி மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்

14 Dec 2025, 3:45 pm
ஏல சீட்டு நடத்தி மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்
<p><strong>ஏல சீட்டு நடத்தி மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம்</strong></p> <p>நாமக்கல், டிச.14- ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடு பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் எருமப்பட்டி காவல் நிலை யம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி, பழனி நகரைச் சேர்ந்த வசந்தா &nbsp;என்பவரிடம், கடந்த எட்டு ஆண்டு களாக பொது மக்கள் ஏலசீட்டு, பல கார சீட்டு, குலுக்கல் சீட்டு என &nbsp;பணம் செலுத்தி வந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டிய &nbsp;பணத்தை திரும்பத்தராமல் அதிக &nbsp;வட்டித் தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, பொதுமக்களை வசந்தா ஏமாற்றி வந்தார். ஏல &nbsp;சீட்டு போட்டு வந்த ரவி, காளியப் பன், பரிமளா ஆகியோர் குடும்ப &nbsp;செலவிற்காக, 2023 ஆம் ஆண்டு பணத்தை கேட்டபொழுது, &lsquo;பணத்தை தர முடியாது; உன்னால் &nbsp;என்ன செய்ய முடியுமோ செய்&rsquo; என்று வசந்தா கூறியதாகத் தெரி கிறது. இதனால் மன உளைச் சலடைந்த பரிமளா, வசந்தா ஆகி யோர் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தனர். இதன்பின் 2023 ஆம் &nbsp;வருடம் பதியப்பட்ட வழக்கின் உண்மை தன்மையை அறிந்து &nbsp;கொள்ள சனியன்று பாதிக்கப்பட்ட &nbsp;பொதுமக்களை திரட்டி தமிழ்நாடு &nbsp;விவசாயிகள் சங்கத்தினர் எருமப் பட்டி காவல் நிலையம் முன்பு காத் திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில், ஒன்றியத் தலைவர் மு.து. செல்வராஜ், ஒன்றியப் பொருளா ளர் பி.கருப்பண்ணன், பால் உற் பத்தியாளர் சங்க ஒன்றிய செயலா ளர் ஆர்.சத்யா, கிளைச் செயலாளர் கள் சிவா, சிவசங்கர் மற்றும் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் உட்பட பலர் &nbsp;கலந்து கொண்டனர். இதைய டுத்து போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது, வசந்தா என்பவர் மீது முதல் &nbsp;தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்கிறோம் என போலீசார் உத்தரவாதம் அளித்த நிலையில், போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.