மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசியை உறுதிப்படுத்த கோரி போராட்டம்
16 Jul 2026, 11:53 pm
<p><strong>மாற்றுத்திறனாளிகளுக்கு 35 கிலோ அரிசியை உறுதிப்படுத்த கோரி போராட்டம்</strong></p><p>விருதாச்சலம், ஜூலை 16- கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஏழை மக்களுக்கான அரிசி விநியோக முறையில் ஒன்றிய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டத் திருத்த முன்மொழிவைக் கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு நபர் குடும்பத்திற்கு 7 கிலோ அரிசி மட்டுமே வழங்கும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், அந்த்யோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏழை மக்கள் அனைவருக்கும் தலா 35 கிலோ அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகள் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பழங்குடி மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் மற்றும் வாலிபர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய முடிவுகளை அரசு கைவிட வேண்டும் என்று அவர்கள் தங்களது கண்டன உரைகளில் வலியுறுத்தினர்.</p>
