சமூக சிந்தனையாளர் என்று சொல்லி அவதூறு அங்கன்வாடி ஊழியர் சங்கம் கொந்தளிப்பு
13 Jul 2026, 12:15 am
<p><strong>சமூக சிந்தனையாளர் என்று சொல்லி அவதூறு அங்கன்வாடி ஊழியர் சங்கம் கொந்தளிப்பு</strong></p><p>திருப்பூர், ஜூலை 12- தமிழ்நாட்டில் மகத்தான வேலை செய்து வரும் அங் கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சமூக சிந்தனையாளர் எனக் கூறிக் கொண்டு மிக மோசமான முறையில் அவதூறு பரப்பும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத் தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் சனியன்று அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத் தின் மாவட்டத் தலைவர் சித்ரா தேவி, மாவட்டச் செயலாளர் லதா ஆகியோர் தலை மையில் திரளான ஊழியர்கள் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கௌசல்யா என்பவர், சமூக சிந்தனையாளர் என்று கூறிக்கொண்டு அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் குறித்து மிக வும் கீழ்த்தரமாகவும், இழிவாகவும் ஆதார மற்ற முறையில் அவதூறுகளை பரப்பி வருகி றார். குறிப்பாக குடும்ப உறவை கொச்சைப் படுத்தி வக்கிரமான முறையில் கருத்துக் களை பரப்பி வருகிறார். அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்களின் மகத்தான பணியை மோசமான முறையில் இழிவுபடுத் துகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் ஐ சி டி எஸ் திட்டத்தின் மூலம் சிறு குழந்தைகளின் முன் பருவக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட் டிற்கு பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் மனதை புண்படுத்தும் விதத்தி லும், கொந்தளிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இந்த அவதூறுகள் உள்ளன. சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கௌசல்யாவின் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.</p>
