கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு பயனற்றது; உர விலை உயர்வு ஆபத்தானது
26 May 2026, 9:13 pm

கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு பயனற்றது; உர விலை உயர்வு ஆபத்தானது

மாநிலம் முழுவதும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்/ராணிப்பேட்டை, மே 26- தமிழக அரசு வெளியிட்டுள்ள கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி அறி விப்பு விவசாயிகளுக்கு முழுமையான பயனைத் தராது என்றும், உர விலை உயர்வை வாபஸ் பெறக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட் டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலா ளர் சாமி.நடராஜன் மற்றும் ராணிப் பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தைத் துவக்கி வைத்துப் பேசிய மாநி லத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் கூட்டுறவு கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி, தேர்தல் கால வாக்குறுதியை முழுமை யாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.

முன்னதாக செய்தியாளர் சந்திப் பில் சாமி.நடராஜன் பேசுகையில், “விவசாயிகளின் 5 ஏக்கர் வரையி லான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள அறி விப்பில், 50,000 ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் முழுமையாகத் தள்ளு படி செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயி களுக்கு கடனில் 50% மட்டுமே தள்ளு படி என அறிவிக்கப்பட்டுள்ளதால், இது தமிழ்நாட்டில் பயிர்க்கடன் பெற்று உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயனைத் தராது.

மேலும், இக்கடன் தள்ளுபடிக் கான காலக்கெடுவாக 10 மாத காலமே (2025 மே முதல் 2026 பிப்ரவரி வரை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 மார்ச், ஏப்ரல் மற்றும் 2025 மே மாதத்திற்கு முன்பாகக் கடன் வாங்கிய விவசாயிகளின் நிலை என்ன என்பது குறித்து எந்த ஒரு தெளிவான அறி விப்பும் இல்லை. எனவே, முதலமைச்சர் இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, 5 ஏக்கருக்குக் கீழ் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன் களையும் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வலி யுறுத்தினார். இச்சந்திப்பின் போது விவசாயி கள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.டி.முருகன் உள்ளிட்ட நிர்வாகி கள் உடனிருந்தனர்.

தாறுமாறான உர விலை உயர்வுக்கு எதிர்ப்பு

ஒன்றிய அரசின் விவசாய விரோத கொள்கையினால் சல்பேட், பாக்டாம் பாஸ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட ரசாயன உரங்களின் விலை மூட்டைக்கு 200 முதல் 450 ரூபாய் வரை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வேளாண் நெருக்கடியை அதிகரித்து வரும் மோடி அரசின் இக்கொள் கையை விவசாயிகள் சங்கங்கள் கண்டித்துள்ளன.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தாலுகா செயலாளர் ஆர். மோகன் ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் துவக்கவுரை யாற்றினார். இப்போராட்டத்தில், உர விலை உயர்வை ரத்து செய்யக் கோரி யும், கடந்த 50 ஆண்டு காலமாக நிலு வையில் இருந்து வரும் கீழ்மின்னல் மதுரா, கன்னிகாபுரம் ஆகிய பகுதி களைச் சேர்ந்த 105 வீடுகளுக்கு உட னடியாக வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது.

இதில் சிபிஎம் மாவட்டச் செயலா ளர் பி. ரகுபதி, மாநிலச் செயலாளர் இரா. சரவணன் உட்பட விவசாய, தொழிலாளர் சங்கங்களின் தாலுகா, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டனம் பதிவு செய்தனர்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற இப் போராட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பி.எஸ். மாசிலாமணி உள்பட மாநில, மாவட்டத்தலைவர்கள் தலைமை ஏற்றனர்.