கோவை அண்ணாநகரில் மறுக்கப்படும் சமூக நீதி அரசு பேருந்துக்காக தொடரும் போராட்டம்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>கோவை அண்ணாநகரில் மறுக்கப்படும் சமூக நீதி அரசு பேருந்துக்காக தொடரும் போராட்டம்</strong></p>
<p>கோவை மாவட்டம், தொண்டா முத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கெம்பனூர் அருகே உள்ள அண்ணாநகரில், சுமார் 300-க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவ சாய கூலிப் பணியாளர்களாக உள்ள இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் முதி யோர் என அனைவரும் 500 மீட்டர் தொலைவில் உள்ள கெம் பனூர் பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்றுதான் பேருந்தில் பய ணிக்க வேண்டிய நிலை உள்ளது. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக இது இருப்ப தால், மாலை நேரங்களில் நடமாடு வது பெரும் அச்சுறுத்தலாக உள் ளது. கெம்பனூர் வரை தினமும் 16 முறை இயக்கப்படும் 21, 21பி ஆகிய அரசுப் பேருந்துகள், அரு கிலுள்ள அண்ணாநகருக்கு மட் டும் இயக்கப்படுவதில்லை. இதற்கு, பேருந்து அண்ணாநகர் வரை சென்றால், “பட்டியலின மக் கள் இருக்கையில் அமர்ந்து செல் வார்கள், கெம்பனூர் மக்கள் நின்று செல்ல வேண்டுமா?” என்று ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்புத் தெரிவிப்பதே காரணம் என்று அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காலத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு, பின்னர் கெம்பனூர் மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்ட இந்த சேவைக்காக, அண்ணாநகரில் பேருந்து நிழற் குடை மட்டும் கட்டப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டனர். அதிகாரிகள் சாதிய பாகுபாட் டைப் பார்க்கிறார்களா என்ற கேள்வியுடன், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் போராடி வரு கின்றனர். அண்மையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துச் செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட் டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 15 கி.மீ. பயணித்து போளுவாம்பட்டி பேருந்து மற்றும் வேறு ஒரு பேருந்து திருப்பிவிடப்படும் போது, வெறும் 500 மீட்டர் தொலை வுக்கு 21ஆம் எண் பேருந்தை இயக்க முடியாதது ஏன்? என்று அண்ணாநகர் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சமூக நீதி பேசும் அரசு, அண்ணாநகர் மக்களுக்கு மட்டும் சமூக நீதியை மறுக் கக் காரணம் என்ன? என்பதே அவர் களின் ஆதங்கம் இது குறித்து பேசிய அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜெயக் குமார் கூறியதாவது, அதிகளவு பேருந்தில் பயணிக்கும் மக்க ளும் இங்கு தான் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் பேருந்து கேட்டு போராட்டத்தை முன்னெ டுத்தோம், அப்போது வருவாய் கோட்டாச்சியர், காவல் கண்கா ணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகா ரிகள் வந்தார்கள். அப்போது கெம் பனூர் வரும் பேருந்தை விட அப் பகுதி மக்கள் விடமாட்டேன் என் கிறார்கள். அதற்கு மாற்றாக நாங் கள் என்ன செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறார்கள். மேலும் தேவ ராயபுரம் செல்லும் 21பி என்ற பேருந்து மற்றும் போளுவாம்பட்டி செல்லும் 64சி பேருந்தை இங்கு திருப்பி விட்டனர். இதை செய்ய முடிந்த அதிகாரிகளுக்கு 500 மீட்டர் தொலைவிற்கு தினமும் 16 முறை இயக்கப்படும் 21 எண் பேருந்தை இயக்குவதில் என்ன பிரச்சனை?. அமெரிக்கா, ஆப்ரிக்காவில் இருந்து பேருந்து அனுப்ப வேண்டாம் கெம்பனூரில் இருந்து வரும் பேருந்தை அனுப் புங்கள் என்று கூறுகிறோம். ஆனால் சமூகநீதி பேசும் ஆட்சி யின் கீழ் பணியாற்றும் அதிகாரிக ளோ தற்காலிக தீர்வுக்குத்தான் முயற்சிக்கிறார்கள் என்றார். இந்த விவகாரத்தில் அரசு அதி காரிகள் தலையிட்டு, சாதிய பாகு பாட்டை கடந்து, உடனடியாக பேருந்து சேவையை வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கை. - கவி</p>
