தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Jan 2026, 2:48 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

5 ஆவது நாளாக தொடர் போராட்டம்

தருமபுரி, ஜன.10- பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களின் காத்தி ருப்புப் போராட்டம் சனியன்று 5 ஆவது நாளாக தொடர்ந்தது. பணியாளர்களின் எதிர்கால நலன்கருதி, வருங் கால வைப்பு நிதி, காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியா ளரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.  நகர்புறப் பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண் டும். பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்புடன் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றம் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பல்வேறு மாவட் டங்களில் சனியன்று 5 ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

நாய்கள் கடித்து கால்நடைகள் பலி

நாமக்கல், ஜன.10- குமாரபாளையம் அருகே தெரு நாய்கள் கடித்து 6 ஆடுகள், 8 கோழிகள் உயிரிழந்த நிலையில், 30 ஆடு கள் படுகாயமடைந்தது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சாணார்பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ் (40), ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர்  வழக்கம் போல் வெள்ளியன்று இரவு ஆடுகளை பட்டி யில் அடைத்து வைத்தார். நள்ளிரவில் அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் பட்டியில் புகுந்து, ஆடுகளை கடித்து குதறியுள்ளன. இதனையடுத்து சனியன்று காலை செல்வராஜ் பட்டியில் பார்த்தபோது 6 ஆடு கள், 8 கோழிகள் உயிரிழந்த நிலையில், 30 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரத் துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து வி.ஏ.ஓ. செந்தில்குமார் கொடுத்த தகவல்படி, காயம டைந்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச் சையளித்தனர். மேலும், குப்பாண்டபாளையம் ஊராட்சி நடவ டிக்கை எடுத்து, இப்பகுதியில் சுற்றி வரும் தெரு நாய் களை காப்பகத்தில் விட வேண்டும். வீட்டில் வளர்க் கும் நாய்களுக்கு ஊராட்சியில் பாஸ்பெற்று இரவில் வெளியே விடாமல் பாதுகாப்பு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

1847 சாலைகள் சீரமைப்பு

கோவை, ஜன.10- கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூடு தல் நிதியாக ரூ.106.14 கோடி மதிப்பீட்டில் 1847 புதிய சாலைகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி பகுதிக ளில் உள்ள 3456 மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளைப் புதுப்பிப்பதற்காக ரூ.200 கோடி நிதி  ஒதுக்கப்பட்டது. இதில் சுமார் 503.67 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, தற்போது வரை 3229 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 227  சாலைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் வரும் ஜனவரி 31 ஆம்  தேதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது கூடுதலாக ரூ.106.14 கோடி மதிப்பீட்டில் 254.54 கி.மீ நீளத்திற்கு  1847 சாலைகளைப் புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட் டுள்ளது. இதில் 1379 தார் சாலை பணிகளும், 468 சிமெண்ட் சாலை பணிகளும் மேற்கொள்ளப்பட உள் ளன. இந்த புதிய சாலைப் பணிகளுக்கான நிர்வாக  அனுமதி பெறப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப் பட உள்ளன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சாலை சீரமைப்புப் பணிகளும் தரமாக வும், விரைவாகவும் முடிக்கப்படும் என்று அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளார்.

இளம் தலைமுறையினருக்கு நீதிபதி அறிவுரை

உதகை, ஜன.10- போக்குவரத்து விதிகளை மதிப்பது, பின் பற்றுவது குறித்து இளம் தலைமுறையின ருக்கு நீலகிரி மாவட்ட நீதிபதி சந்திரசே கரன் அறிவுறுத்தியுள்ளார். நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், உதகையிலுள்ள ஜெல் மெமோ ரியல் பெண்கள் பள்ளியில் சாலைப் பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது. இதில் சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியு மான பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாஷ், முதன்மை  குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சசிகலா, சார்பு நீதிபதி பாரதி பிரபா, கூடுதல் மகளிர் குற்றவியல் நீதிபதி சோழியா ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாவட்ட நீதிபதி சந்திரசேகரன் தலைமை வகித்து பேசுகை யில், சாலை அனைவருக்கும் பொதுவானது. இளம் தலைமுறையினர் மோட்டாா் வாகன விதிகள், சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும்போது அவசரம் கூடாது. பொறு மையும், சகிப்புத் தன்மையும் முக்கியம். நீல கிரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த 128 சாலை விபத்துகளில் 24 பேர் உயிரிழந் துள்ளனர். சாலையில் பயணிக்கும்போது, ஏதேனும் விபத்து நிகழ்ந்ததை பார்த்தால், அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். இளம் தலைமுறையினர் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றுவதுடன், அதனை மற்றவர்களுக்கும் தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் நகர போக்குவரத்து உதவி ஆய்வாளர் அருண், மோட்டார் வாகன ஆய் வாளர் குணசேகரன், ஒருங்கிணைந்த சேவை  மைய நிர்வாகி ஹெலன் கிறிஸ்டினா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

108 ஆம்புலன்ஸ் மூலம் 59,412 பேர் பயன்

ஈரோடு, ஜன.10- ஈரோடு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் மட்டும், 108 ஆம்புலன்ஸ் மூலம் 59,412 பேர் பாதுகாப்படைந்தனர். இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் உதயநிதி மற்றும் ஒருங்கி ணைப்பாளர் அம்பிகாசன் ஆகியோர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், 108 ஆம்பு லன்ஸ் பல்வேறு வகையான முதலுதவி களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அதில் விஷம் குடித்தவர்கள், கடுமையான வயிற்று  வலி, ஒவ்வாமை, நாய் கடி, கால்நடைகள் தாக்குதல், தகராறில் காயமடைதல், இத யம் மற்றும் ரத்த நாளங்கள் பாதிப்பு, சர்க் கரை நோய், காய்ச்சல் மற்றும் தொற்று, குழந்தை பிறப்பு, மகப்பேறு மருத்துவம், சுவாசம் தொடர்பான மருத்துவம், வாகன விபத்தில் அதிர்ச்சி அடைதல், வாகனம் இல்லாமல் அதிா்ச்சி அடைதல், சுயநினைவு இல்லாமல் மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் 108 ஆம்புலன்ஸை பயன்படுத்துகின்றனர். இவ் வாறு பயன்படுத்தியதில் கடந்தாண்டு விபத் தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 14,169. கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 386, இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள் எண் ணிக்கை 3,634, சுவாச பிரச்சனை உடை யவர்கள் 1,145, வாத பிரச்சனை உடைய வர்கள் 829, பச்சிளம் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் 444 என மொத்தம் 59,412 பேர்  ஆம்புலன் சேவையை பெற்றுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுந்து விபத்தில் பெண் உயிரிழப்பு

உதகை, ஜன.10- நீலகிரி மாவட்டம், உத கையிலிருந்து தங்காடு கிரா மத்தை நோக்கி தனியார் சிற் றுந்து கடந்த புதனன்று சென்று கொண்டிருந்தது. இதில் 21 ஆண்கள், 12 பெண் கள், 3 குழந்தைகள் என 36 பேர் பயணித்தனர். மண லாடா அருகே ஓட்டுநரின் கட் டுப்பாட்டை இழந்து 100  அடி பள்ளத்தில் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளா னது. இவ்விபத்தில், பேருந் தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்டோர் சிறு காயங்க ளுடன் உதகை அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட னர். இதில் படுகாயமடைந்த பவளம் (60) என்பவர் கோவை யிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளி யன்று உயிரிழந்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.