முந்தய பக்கம்

தர்மேந்திரபிராதனை பதவிநீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

18 Jul 2026, 11:53 pm
தர்மேந்திரபிராதனை பதவிநீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்
<p><strong>தர்மேந்திரபிராதனை பதவிநீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததற்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் நீதி கேட்டு தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்-க்கு ஆதரவாக சனிக்கிழமையன்று (ஜூலை 18) எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மருத்துவர் அமலோற்பநாதன், எழுத்தாளர் கொற்றவை, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி.மிருதுளா, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன், கே.முருகன், எழும்பூர் பகுதிச் செயலாளர் வே.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram