அடிப்படை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை எழுத்துப்பூர்வ உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ்!
25 Nov 2025, 3:29 pm
<p><strong>அடிப்படை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை எழுத்துப்பூர்வ உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ்!</strong></p>
<p>நாமக்கல், நவ.25– மூன்று வருடங்களாக சாக் கடை கழிவுநீர் சுத்தம் செய்யாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலை யில், ஊராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை யில் ஈடுபட்டதை தொடர்ந்து, எழுத்துப்பூர்வ உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட் டனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள எலச்சி பாளையம் ஒன்றியம், 87 கவுண் டம்பாளையம் ஊராட்சியில் 10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி யில் விசைத்தறித் தொழில் பிர தான தொழிலாக விளங்குகிறது. இங்குள்ள ஒன்பது வார்டுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக சாக்க டைக் கழிவுநீர் கால்வாய்கள் முறை யாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தன. இதன் காரணமாக கழிவுநீர் சாலைகளில் தேங்கி நின்று, அப் பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளருக்குப் பொதுமக்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட் டும், எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இந்நிலையில், சாக் கடைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் 87 கவுண் டம்பாளையம் ஊராட்சி மன்ற அலு வலகத்தை முற்றுகையிடும் போராட் டம் செவ்வாயன்று நடைபெற்றது. சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை யிட சென்றனர். இதனையறிந்து அலுவலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்ற னர். இருந்தபோதும், மார்க்சிஸ்ட் கட்சியினர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத் துக்கு வந்த எலச்சிபாளையம் மண் டல துணை வட்டார வளர்ச்சி அலு வலர் பெரியசாமி, 87 கவுண்டம் பாளையம் ஊராட்சி தனி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் போராட் டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாக்கடைக் கழிவுநீரை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த உறுதிமொழியை எழுத்துப்பூர்வ மாக தர வேண்டும்” என வலி யுறுத்தினர். இதனை ஏற்ற அதி காரிகள், வரும் 31 ஆம் தேதிக்குள் சாக்கடைப் பிரச்னையை சரி செய்து தருவதாக எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளித்த னர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ் மணி, எலச்சிபாளையம் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சு.சுரேஷ், சிபிஎம் மூத்த தலைவர் சி.சுந்தரம், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கவிதா, மேற்கு ஒன்றியச் செயலா ளர் ரமேஷ், ஒன்றியக் குழு உறுப் பினர் பி.கிட்டுசாமி, மாதர் சங்க ஒன்றியப் பொருளாளர் எஸ்.லட் சுமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.</p>
