தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வூதிய நிலுவையை வழங்கக் கோரி முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

16 Feb 2026, 2:37 pm
ஓய்வூதிய நிலுவையை வழங்கக் கோரி முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
<p><strong>ஓய்வூதிய நிலுவையை வழங்கக் கோரி முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்</strong></p> <p>சென்னை, பிப். 16 தையல் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, முதலமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தைத் தமிழ் மாநில தையல் கலை ஞர்கள் சங்கம்(சிஐடியு) அறி வித்துள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாநிலத் தலைவர் பி. சுந்தரம் தலைமை யில் நடைபெற்ற ஆலோச னைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் எம். தனலெட்சுமி, பொதுச்செய லாளர் எம். ஐடா ஹெலன், பொரு ளாளர் சி. மாரிக்கண்ணு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆர். ஜோசப், ஜி. குணசேகர், எம். சாராள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சுமார் 25 லட்சம் தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். இவர்களின் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்துவதுடன், வாரியத்திற்குத் தனி நிதியமும், முத்தரப்புக் குழுவும் அமைக்க வேண்டும் எனச் சங்கம் கோரியுள்ளது. &nbsp;மேலும், கட்டுமானத் தொழி லாளர்களுக்கு இணையான சலுகைகள், ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை, விலையில்லா தையல் இயந்தி ரம் மற்றும் தொழில்சார் நோய்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. வாழ்வா தாரப் போராட்டத்திலுள்ள இத்தொழிலாளர்களின் துயர்தீர்க்க, 5 மாத நிலுவைத் தொகையை விரைந்து விடுவிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு இக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.