கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
20 Jan 2026, 2:46 pm
<p>நாளை மின்தடை ஈரோடு, ஜன.20- ஈரோடு மாவட்டம், சென் னிமலை துணை மின் நிலை யத்தில் வியாழனன்று (நாளை) மாதாந்திர பராம ரிப்புப்பணிகள் நடைபெற வுள்ளது. இதனால் சென்னி மலை நகர் பகுதி முழுவதும், ஈங்கூர் சாலை, குமராபுரி, சக்தி நகர், பெரியார் நகர், குப்பிச்சிபாளையம், திப்பம் பாளையம், அம்மாபாளை யம், அசோகபுரம், புதுப்பா ளையம், ராமலிங்கபுரம், அய் யம்பாளையம், கொடு மணல், பசுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.</p>
<p>பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நாமக்கல், ஜன.20- ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தை சிறை பிடித்து, பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் காவல் துறையிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகு தியை சேர்ந்தவர்கள் தங்கம் (22) மற்றும் சரவணன் (26). இருவரும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராசி புரம் அடுத்த ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை செல்வதற்கு திங்களன்று தனியார் (விநாயக) பேருந்தில் ஏறி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இறங்குவதற்கு 2 பயண சீட்டு எடுத்த போது பேருந்து நடத்துநர் அங்கு பேருந்து நிற்காது என கூறி ராசிபுரம் பேருந்து நிலையத்திற்கு பயண சீட்டை அச்சடித்து வழங்கியுள்ளார். இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட இளைஞர்கள் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டையாம்பட்டி பிரிவு வந்த பேருந்தை வழி மறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பேருந்து ஏன் நிற்காது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து விடாத நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக வெண்ணாதூர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
