முந்தய பக்கம்

காலி சிலிண்டரை சாலையில் வைத்து மறியல்

30 Mar 2026, 3:40 pm
காலி சிலிண்டரை சாலையில் வைத்து மறியல்
<p><strong>காலி சிலிண்டரை சாலையில் வைத்து மறியல்</strong></p> <p>உதகை, மார்ச் 30- சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, &nbsp;உதகை &ndash; குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் காலி &nbsp;சிலிண்டர் மற்றும் கற் களை வைத்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வளைகுடா நாடுகளில் நிலவும் போர் காரணமாக, இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு காணப்படுகிறது. தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளுக்கு பயன்படுத் தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளது. ஒருமுறை பதிவு செய்து 40 நாட்களுக்கு மேலாகியும், தங்களுக்கு இதுவரை சமையல் எரிவாயு கிடைக்கவில்லை பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந் நிலையில், திங்களன்று உதகை - குன்னூர் தேசிய நெடுஞ் சாலையில் பொதுமக்கள் சாலையின் குறுக்கே சிலிண்டர் மற்றும் கற்களை அடுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் &nbsp;காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram