வீட்டுமனை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>வீட்டுமனை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்</strong></p>
<p>மேட்டுப்பாளையம், மார்ச் 13- மேட்டுப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை தொழிலாளர் குடும்பங்க ளுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சிஐ டியு பொதுத்தொழிலாளர் சங்கத் தின் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கணக்கான ஏழை தொழி லாளர் குடும்பத்தினர், பல ஆண்டு களாக அரசிடம் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்து வரு கின்றனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தி, வியாழனன்று சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் மேட்டுப் பாளையம் வட்டாட்சியர் அலுவல கத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பாஷா தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி போராட்டத்தை துவக்கி வைத்தார். சங்க நிர்வாகி கள் சாமுவேல், முகமது அலி, ஜின்னா, ஷானவாஸ், சத்யா உள் ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற் பட்ட பெண்கள் தங்கள் குழந்தை களுடன் வட்டாட்சியர் அலுவலகத் தில் திரண்டனர். இப்போராட்டம் தீவிரமடையும் சூழ்நிலை காணப்பட்டதால், மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலும், காவல் ஆய்வா ளர் மணிகண்டன் முன்னிலையி லும் உதவி ஆய்வாளர்கள் ராமச் சந்திரன், சரத்குமார், சிறப்பு பிரிவு தலைமை காவலர்கள் கண்ணன் ரஞ்சித் மேற்பார்வையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் கவிதா, தலைமையிடத்து வட் டாட்சியர் ரேவதி உள்ளிட்ட வரு வாய்த்துறை அதிகாரிகள் போராட் டத்தில் ஈடுபட்ட மக்களுடன் நேரடி யாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடு பட்ட தொழிலாளர்கள், “இதற்கு முன்பும் பலமுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி மொழி அளித்துள்ளனர். அரசு புறம் போக்கு நிலங்கள் உள்ள இடங் களையும் காட்டியுள்ளனர். ஆனால், இதுவரை ஒரு குடும்பத் திற்குக்கூட பட்டா வழங்கப்பட வில்லை” என குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்த வரு வாய்த்துறை அதிகாரிகள், “சில தினங்களுக்குள் தகுதியான அரசு புறம்போக்கு நிலங்களை கண்ட றிந்து, உரிய ஆய்வு நடத்தி, தகுதி யானவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்” என்று உறுதிமொழி அளித்த னர். அதற்கு, “பல ஆண்டுகளாக வீட்டுமனை கேட்டு போராடி வரு கிறோம். தேர்தலுக்கு முன்பாகவே வீட்டு மனை ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில், வாக்காளர் அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையத் திற்கு திருப்பி அனுப்புவது, வீடு களில் கருப்புக்கொடி ஏற்றுவது, மயானங்களில் குடியேறும் போராட்டம் நடத்துவது போன்ற தீவிர நடவடிக்கைகளிலும் ஈடு படுவோம்” என்று எச்சரிக்கை விடுத் தனர். இதைத்தொடர்ந்து, விண் ணப்பங்களை அதிகாரிகளிடம் ஒப் படைத்து, அதன் ஒப்புதல் பெறப் பட்ட பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில் சிஐ டியு பொதுத்தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கனகமணி, குணசே கரன், மகாலிங்கம், ஹபிபுல்லா, பார்த்தசாரதி, சதாம் உசேன், நாக லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
