தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

4 Dec 2025, 3:52 pm
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில்  மேகதாது அணை கட்டுவதை  தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்
<p><strong>விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் &nbsp;மேகதாது அணை கட்டுவதை &nbsp;தடுத்து நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>தஞ்சாவூர், டிச.4- &nbsp;தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வியாழக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. &nbsp;கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை கண்டித்து பெரும்பாலான விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேகதாது அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். &nbsp;குறைதீர் கூட்டத்தில், விவசாய சங்க கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில், விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மழையால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை முறையாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். பழைய நடைமுறையிலேயே கணக்கீடு செய்ய வேண்டும். பாதிப்பு விவரங்களை குறைவாக காண்பிக்கக் கூடாது. பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிடட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.