தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நிலப்பட்டா கோரி புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரிப் போராட்டம்

1 Dec 2025, 5:20 pm
நிலப்பட்டா கோரி புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரிப் போராட்டம்
<p><strong>நிலப்பட்டா கோரி புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரிப் போராட்டம்</strong></p> <p>கடலூர், டிச.1- கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டாட்சி யர் அலுவலகம் முன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது. &nbsp;கீழ் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நிலப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ் வளையமாதேவி கிராமத்தில் ஆக்கிர மிக்கப்பட்ட 20 ஏக்கர் தரிசு நிலத்தை அகற்றி, வீட்டுமனை இல்லாத அனை வருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதில் முதன்மையானது. &nbsp;அத்துடன், 1990-ஆம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பட்டா விற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வசிக்கும் மக்களுக்கு மனைப் பட்டா மற்றும் மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும், 2011-இல் வழங்கப்பட்ட குடி மனைப் பட்டாவினை வருவாய்த் துறை கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும், வளையமாதேவி மாதா கோவில் அருகே பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எஸ். பிரகாஷ், பொருளாளர் டி. கிருஷ்ணன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் கீழ் வளையமாதேவி கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அறிந்த வட்டாட்சியர் அன்பழகன், போராட்டக்காரர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த கோரிக்கைகள் மீது 15 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். வட்டாட்சியரின் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் அனைவரும் அதன்பின்னர் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.