தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் ஜன.6க்குள் நிலத்தை அளந்து தருவதாக அதிகாரிகள் உறுதியளிப்பு

24 Dec 2025, 4:16 pm
அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் ஜன.6க்குள் நிலத்தை அளந்து தருவதாக அதிகாரிகள் உறுதியளிப்பு
<p><strong>அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் ஜன.6க்குள் நிலத்தை அளந்து தருவதாக அதிகாரிகள் உறுதியளிப்பு</strong></p> <p>அவிநாசி, டிச.24- ஈட்டிவீரம்பாளையம் கிராமத் தில் ஏழை எளிய மக்களுக்கு க.ச. எண்.544 இடத்தை நீதிமன்ற உத்தர வுப்படி அளந்து தரக்கோரி அவி நாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீ ரம்பாளையம் கிராமத்தில் க.ச.எண் &nbsp;544 அரசு புறம்போக்கு நிலத்தில் &nbsp;வீடு மற்றும் நிலமற்ற ஏழை விவசாய &nbsp;கூலி வேலை செய்பவர்களுக்கு வீட் டுமனை பட்டா 1994 ஆம் ஆண்டு &nbsp;வழங்கப்பட்டது. ஆனால் தற் போது வரை நிலம் அளந்து தரப்பட வில்லை. நிலத்தை அளந்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றி யக்குழு சார்பில் 2024 செப்டம்பர் மாதத்தில் வட்டாட்சியர் அலுவ லகத்தில் காத்திருக்கும் போராட் டம் நடைபெற்றது. மேலும் நடை பயணம், மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் காத்திருக்கும் போராட்ட மும் நடத்தப்பட்டது. &nbsp;கடந்த செப்.30 ஆம் தேதி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அப் போது டிச.15 ஆம் தேதிக்குள் ஆக்கி ரமிப்புகளை அகற்றி பட்டா நிலத்தை அளந்து தருவதாக மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் அளித்தது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தப்பட்ட வழக்கில், பயனா ளிகளுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இருப்பினும் இது வரை நிலம் அளந்து கொடுக்கப்பட வில்லை. இந்நிலையில், நீதிமன்ற உத்தர வுப்படி நிலத்தை அளந்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு &nbsp;முன்னணி சார்பில் புதனன்று அவி நாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. இதையடுத்து டிஎஸ்பி சிவகு மார், அவிநாசி வட்டாட்சியர் உள் ளிட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியினருடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டார். அதில், ஜன.6 ஆம் &nbsp;தேதிக்குள் உறுதியாக நிலத்தை &nbsp;அளந்து தருவதாக உறுதி அளிக் கப்பட்டது. இதைதொடர்ந்து காத்தி ருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.காளியப்பன், ச.நந்தகோபால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் பரமசிவம், மாவட்டத் தலைவர் ஞானசேகர், மாவட்டப்பொருளாளர் சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினர் ஆ.சிகாமணி, அவிநாசி ஒன்றி யக்குழு உறுப்பினர் சண்முகம், வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பி.கே.கருப்புசாமி உட்பட பொது மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.