ஓய்வூதியம் வழங்காததைக் கண்டித்து போராட்டம் அறிவிப்பு
12 Dec 2025, 3:12 pm
<p>சிதம்பரம், டிச. 12- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், பணப்பயன்கள் மற்றும் நிலுவைத் தொகைகள் வழங்கப்படாததைக் கண்டித்து, ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தலைவர் பேராசிரியர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் மனோகரன், மதியழகன், பேராசிரியர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகள் செப்டம்பர் 2024 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 2012 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 50% பணிக்கொடை, 50% ஈட்டிய விடுப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய கம்யூடேஷன் தொகைகளை முழுமையாக வழங்க வேண்டும். ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே வருங்கால வைப்பு நிதி மற்றும் சிறப்பு வருங்கால வைப்பு நிதித் தொகைகளை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காணவில்லை என்றால், வரும் 16.12.2025 அன்று பல்கலைக்கழகத் தலைமை அலுவலகம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.</p>
