தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

5 ஆயிரம் பயனாளிகளுக்கு நிலம் வழங்கப்படாததால் ஜன.29இல் தாராபுரம் கோட்டத்தில் போராட்ட அறிவிப்பு

8 Jan 2026, 2:44 pm
5 ஆயிரம் பயனாளிகளுக்கு நிலம் வழங்கப்படாததால்  ஜன.29இல் தாராபுரம் கோட்டத்தில் போராட்ட அறிவிப்பு
<p><strong>5 ஆயிரம் பயனாளிகளுக்கு நிலம் வழங்கப்படாததால் &nbsp;ஜன.29இல் தாராபுரம் கோட்டத்தில் போராட்ட அறிவிப்பு</strong></p> <p>திருப்பூர், ஜன. 8 - திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட் டத்தில் மட்டும் நில உச்சவரம்பு நிலம், பூமி தான நிலம், ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலம் போன்றவை மீட்டு அள வீடு செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட &nbsp;பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படா மல் உள்ளது. வருவாய்த் துறையின் &nbsp;மெத்தனப் போக்கைக் கண்டித்தும், &nbsp;தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மேற் கண்ட நிலங்களை கையகப்படுத்தி, நிலம் அளவீடு செய்து பட்டா நிலம் &nbsp;வழங்க வலியுறுத்தி ஜனவரி 29அன்று &nbsp;தாராபுரம் கோடாட்சியர் அலுவலகத் தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் &nbsp;போவதாக, தாராபுரம் வருவாய் கோட்ட &nbsp;போராட்டக்குழுத் தீர்மானித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் கொழுமங்குளி கிராமத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு தமிழக அர சால் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் &nbsp;உபரி நிலங்கள் எடுக்கப்பட்டு சுமார் 26 பயனாளிகளுக்கு 50 ஏக்கர் நிலம் வழங் கப்பட்டு, அதற்குரிய பட்டாவும் வழங் கப்பட்டுள்ளது. ஆனால்,வருவாய்த் துறையினரால் நிலம் அளந்து பயனாளி களிடம் இன்று வரை ஒப்படை செய்யப் படவில்லை. &nbsp;இதனைப் போன்று, காங்கயம் வட்டம், காடையூர் தற்போது வட்ட மலை, வடசின்னாரிபாளையம் ஆகிய &nbsp;கிராமங்களில் வசிக்கும் பட்டியலின &nbsp;சமூகத்தைச் சேர்ந்த 51 பயனாளிக ளுக்கு தமிழக அரசால் கடந்த 1994ஆம் &nbsp;ஆண்டு நில உச்சவரம்பு நிலம் வழங்க &nbsp;நில ஒப்படைப்பு ஆணை வழங்கப்பட் டது. எனினும் வருவாய்த் துறையினர் பயனாளிகளுக்கு இன்னும் &nbsp;நிலம் ஒப் படை செய்யவில்லை. இதைப் போன்று தாராபுரம் வரு வாய் கோட்டத்தில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட பயனாளிகளக்கு நில உச்ச வரம்பு நிலம் பல ஆண்டுகளாக வழங் கப்படவில்லை. குறிப்பாக காங்கயம் &nbsp;வட்டம், பச்சாபாளையம் கிராமத்திலும் &nbsp;பட்டா வழங்கப்பட்டும் நிலம் ஒப்படை செய்யப்படவில்லை. இவ்வாறு தொடர்ந்து வருவாய் துறையின் மெத்தனப் போக்கைக் கண் டித்தும், தாராபுரம் வருவாய் கோட்டத் தில் நில உச்ச வரம்பு நிலம், பூமி தான நிலம், பஞ்சமி நிலங்களில் உள்ள &nbsp;தனிநபர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப் பட்டு உரிய பயனாளிகளிடம் ஒப்படை &nbsp;செய்ய வலியுறுத்தி தாராபுரம் வருவாய் &nbsp;கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட் டாட்சியரின் உதவியாளர் ஜைலசா விடம் கடந்த திங்களன்று மாலை மனு &nbsp;கொடுக்கப்பட்டது. இதில்,தலித் விடுதலை இயக்கம் மாநில தலைவர் ச.கருப்பையா, ஆதித் தமிழர் ஜனநாயக பேரவை அ.சு.பவுத் தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் &nbsp;திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கனகராஜ், தாராபு ரம் தாலுகா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் 50- க்கும் &nbsp;மேற்பட்ட பயனாளிகளும் பங்கேற்ற னர். நில மீட்பில், வருவாய்த் துறையி னரின் தொடர் மெத்தனப் போக்கைக் கண்டித்து வரும் ஜனவரி 29 வியா ழக்கிழமை தாராபுரம் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பாக காத்தி ருப்பு போராட்டம் நடத்தவும் தாராபு ரம் வருவாய்க் கோட்ட போராட்டக் குழுத் தீர்மானித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.