சிதம்பரம் நகரச் சாலைகளை சீரமைக்க மாதர் சங்கம் கோரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் அறிவிப்பு
3 Dec 2025, 2:59 pm
<p><strong>சிதம்பரம் நகரச் சாலைகளை சீரமைக்க மாதர் சங்கம் கோரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் அறிவிப்பு</strong></p>
<p>சிதம்பரம், டிச. 3- சிதம்பரம் நகரப் பகுதிகளில் சேதமான சாலைகளை உடனடியாகச் சரிசெய்து புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட ஆட்சியருக்கும் நகராட்சி ஆணையருக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. சிதம்பரம் நகரெங்கும் குடிநீர்க் குழாய் அமைப்ப தற்காகவும், வீட்டிற்கு இணைப்பு வழங்குவ தற்காக வும் தோண்டப்பட்ட பள்ளங்களைச் சரி யாக மூடாமல் விட்ட தாலேயே சாலைகள் சேத மடைந்துள்ளன. தற்போது பெய்து வரும் மழையால், கனகசபை நகர், மானா சந்து, தேரடி தெரு உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் சாலைகள் சிதைந்து, பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இடுப்பு வலிக்கும், பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடைவதற்கும் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, கனகசபை நகர்ப் பகுதிகளில் வடி கால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால், மழைநீர் போலீஸ் குடி யிருப்புப் பின்புறம் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. எனவே, அனைத்து வடிகால் வாய்க்கால்களை யும் தூர்வார வேண்டும் என்றும், சேதமடைந்த நகரின் அனைத்துச் சாலை களுக்கும் புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மல்லிகா, நகரச் செயலாளர் அமுதா உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், விரைவில் சிதம்பரம் நக ரத்தில் புதிய சாலைகள் அமைக்கப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.</p>
