அமெரிக்கா, இஸ்ரேல் ஆதிக்க வெறியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>அமெரிக்கா, இஸ்ரேல் ஆதிக்க வெறியை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சேலம், மார்ச் 9- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதிக்க வெறிக்காக ஈரான் நாட்டின் இறையாண்மையை சிதைப்பதை கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தும் போது ஈரான் நாட்டின் உயர்தலைவர்கள், பள்ளிக்குழந்தைகள் அப்பாவி மக்கள் மீது குண்டுகளை வீசி கொள் ளும் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அரசை கண்டித்தும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதிக்க வெறிக் காக ஈரான் நாட்டின் இறையாண் மையை சிதைக்க கூடாது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ஏகாதிபத்திய யுத்தவெறிக்கு துணை போகக் கூடாது. உலக சமா தானத்துக்கு அச்சுறுத்தலாக இருக் கும் போர் நடவடிக்கைகளை உடன டியாக நிறுத்தி, அரசியல் மற்றும் தூதரக வழிகளில் பிரச்சினைக ளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று சேலம் கோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணைத் தலை வர் எஸ்.கே.தியாகராஜன் தலை மையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் பி.உதயகுமார், மாவட்ட நிர்வாகிகள் ஆர். வெங்கடபதி, சி. கருப்பண்ணன், சி.உதயகுமார், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சம்பத், சிபிஐ மாவட்டச் செயலா ளர் மோகன், ஐஎன்டிசி நிர்வாகி முரு கேசன், ஏஐசிசிடியு நிர்வாகி வேல் முருகன், யூடியூசி நிர்வாகி ராஜேந் திரன், ஹெச்எம்எஸ் நிர்வாகி பழனி சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். கோவை கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற நுழைவாயில் எண். 4 முன் பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநிலப் பொருளாளர் மாசேதுங் மற்றும் மூத்த வழக்கறிஞர் ச.பால முருகன், ஐஏஎல் மாவட்டச் செயலா ளர் சக்திவேல், மக்கள் கண்காணிப் பகம் சார்பில் நிக்கோலஸ் உள் ளிட்ட திரளான வழக்கறிஞர்கள் பங் கேற்று, அமெரிக்க ஏகாதிபத்தி யத்தை கண்டித்தும் ஈரான் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரியும் முழக்கங்களை எழுப்பி னர். தருமபுரி இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக சார்பில் தருமபுரி மாவட் டம், அரூர் வட்டாச்சியர் அலுவல கம் முன்பு ஈரான் மீதான தாக்கு தலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி.கே. சாக்கன்சர்மா தலைமை வகித்தார் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் ஒன்றியச் செயலாளர் பி. குமார், சிபிஐ மாவட்ட குழு உறுப்பி னர் அல்லிமுத்து உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.</p>
