00 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
15 Jul 2026, 1:25 am
<p><strong>100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 14 – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சீர்குலைத்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, விவசாயத் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முக்கியக் கோரிக்கைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பதிலாக, தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத் தும் ‘விபிஜி ராம்ஜி’ என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த மாற்றத்தைத் திரும்பப் பெற்று, பழைய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மேலும், விவசாயத் தொழிலா ளர்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 200 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்குவ தோடு, தினக்கூலியாக ரூ.700 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் காரைக்கால் வட்டார வளர்ச்சி அலு வலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூபேஷ்குமார் தலைமை தாங்கினார். சங்கத் தின் புதுச்சேரி மாநிலப் பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இந்நிகழ்வில் மாவட்டச் செய லாளர் அழகப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தமீம் அன்சாரி உட்படத் திரளான விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.</p>
