ஒன்றிய அரசின் GSR 220 புதிய விதிக்கு எதிர்ப்பு
21 May 2026, 12:27 am
<p><strong>ஒன்றிய அரசின் GSR 220 புதிய விதிக்கு எதிர்ப்பு</strong></p><p>ஈரோடு, மே 20 – ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள பொது சட்ட ரீதியான விதிகள் - ஜிஎஸ்ஆர் 220 (GSR 220) என்ற புதிய விதிமுறையால், பாரம்பரியமாக செயல்பட்டு வரும் சிறிய மருந்துக் கடைகள் தங்களின் வாழ்வாதா ரத்தை இழந்து கடுமையாக பாதிக் கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அத்து டன், முறையான சட்டக் கட்டுப் பாடின்றி ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை முற்றி லுமாக தடை செய்ய வேண்டும், கார்ப் பரேட் நிறுவனங்களின் அளவில்லாத தள்ளுபடி விற்பனையை கட்டுப்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, நாடு முழுவ தும் மருந்து வணிகர்கள் தீவிர கடை யடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் பரிந் துரை சீட்டுகளை முறையாக சரி பார்க்காமல் ஆன்லைனில் மருந்து கள் விற்கப்படுவதால் பொதுமக்க ளின் உடல்நலத்திற்கு பேராபத்து ஏற் படும் என்றும், கார்ப்பரேட்டுகளின் தள்ளுபடிப் போரால் லட்சக்கணக் கான சில்லறை வர்த்தகர்கள் நசுக் கப்படுவதாகவும் மருந்து வணிகர் சங்கத்தினர் குற்றம் சாட்டி கடை களை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் 1,000 கடைகள் மூடப் பட்டன. இதன் மூலம் ரூ.5 கோடி விற் பனை பாதிக்கப்பட்டுள்ளதென, மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க தலைவர் துரைசாமி தெரிவித்தார். அதேநேரம், அப்போலோ, மெட் பிளஸ் போன்ற பெரிய நிறுவனங்க ளின் மருந்தகங்கள், மருத் துவமனைகளின் வளாகங்களில் உள்ள அனைத்து மருந்து கடை களும் முழுமையாக செயல்பட்டன. கோவையில் 3,500க்கும் மேற் பட்ட மருந்து கடைகள் அடைக்கப் பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள் ளது. இதேபோன்று சேலம் மாவட் டத்தில் மாநகரப் பகுதிகள் மற்றும் புற நகர் பகுதிகள் என 1000க்கும் மேற் பட்ட மருந்து கடைகள் அடைக்கப் பட்டன. தருமபுரி மாவட்டத்தில் 850க்கும் மேற்பட்ட மருந்து கடை கள் மூடப்பட்டிருந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் ரூ.1.5 கோடி மதிப்பில் மருந்து வணிகம் பாதிக்கப் பட்டது. மருத்துவமனைகளுடன் இணைந்த பகுதிகளிலுள்ள மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட் டன.</p>
