ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து சாலை மறியல் போராட்டம்
10 Aug 2026, 11:10 pm

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

சென்னை, ஆக. 10-ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத புதிய தொகுப்பு சட்டங்கள் நான்கையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் திங்களன்று (ஆக.10) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

வடசென்னை மறியல்

வடசென்னை மாவட்டம் சார்பில் மாதவரம் மூலக்கடை அருகே சிஐடியு மாநிலச் செயலாளர் வி.குப்புசாமி தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணிமேகலை, ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் ஏ.அருள், தொமுச மண்டல தலைவர் தங்கராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

தென்சென்னை

தென்சென்னை மாவட்டத் தில் 2 மையங்களில் மறியல் நடைபெற்றது. கிண்டி அஞ்ச லகம் முன்பு நடைபெற்ற மறியல்போராட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ்.கண்ணன், தென்சென்னைமாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.விஜயா, தொமுச நிர்வாகி தனசேகர்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தாம்பரம்

தாம்பரம் அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர்ஏ.முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஏ.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிஐடியு , தவிச, விதொச காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் தாலுகா அலுவலகம்நோக்கி மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தை சிஐடியு மாநில துணை பொதுச்சாளர் இ.முத்துக்குமார் தலைமையேற்று நடத்தினார். மறியல் போராட்டத்தை விளக்கி தவிச மாநில துணை தலைவர் கே.நேரு, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் என்.சாரங்கன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி. ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றுகைதாகினர்.

திருப்பத்தூர்

போக்குவரத்து கழக வேலூர் மண்டல செயலாளர் சுரேஷ் தலைமையில் நடை பெற்ற மறியலில் சிஐடியு மாவட்டஇணை செயலாளர் ஜோதி, ஒருங்கிணைப்பாளர் கேசவன், சந்திரசேகரன், காமராஜ். தவிச தாலுகா தலைவர்சிங்காரம், செயலாளர் ஆனந்தன் நிர்வாகிகள் ரவி, ரங்கன், கோவிந்தராஜ், ஜெயபால், முத்து, காசி, செல்வம் உட்படபலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட த்தில் 3 மையங்களில் சிறைநிரப்பும் போராட்டம் நடை பெற்றது.அரக்கோணம் ரயில் மறியல் போராட்டத்திற்கு சிஐடியு அரக்கோணம் பொது தொழிலாளர் சங்க செயலாளர் சி.துரைராஜ், விவசாய சங்க வட்டார தலைவர் பொன் சிட்டி பாபு தலைமையில் , சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்என். காசிநாதன், துணைச் செய லாளர் ஏபிஎம். சீனிவாசன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கேகேவி. பாபு, விசைத்தறி மாநில து. தலைவர் ஆர். வெங்கடேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் த. ஞான முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முத்துக்கடை பேருந்து நிலையம் மறியல் போராட்ட த்திற்கு சிஐடியு மாவட்ட செய லாளர் ஆ. தவராஜ் தலைமைதாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் ஆ.கிருஷ்ணமூர்த்தி, தவிச மாவட்ட செயலாளர் எல்சி. மணி,விதொச மாவட்ட தலைவர் டி. சந்திரன், ஆர். மணிகண்டன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஏ.எஸ். சங்கர் மேஸ்திரி, அங்கன்வாடி மாவட்ட பொருளாளர் மாலதி,போக்குவரத்து கே. ரவிச் சந்திரன், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் பி. மணி, வேட்டைக்காரன் சங்கம் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கலவை எஸ்பிஐ முற்றுகை போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். கேட்டு தலைமை தாங்கினார்.இதில் தவிச மாநில செயலாளர் இரா. சரவணன், விதொச மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வேட்டைக்காரன் சங்கமாநில பொருளாளர் எம். சேட்டு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட பொருளாளர் சரோஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு மாநில செயலாளர்எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஜி.சந்தானம்,என்.நித்தியானந்தம், தவிச மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.தமிழ்அரசு,ஜி.சம்பத், விதொச நிர்வாகிகள் இ.தவமணி, அ.து.கோதண்டன், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா,கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் சி.பெருமாள், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகிகள் மயில்வாகனம்,மாரி, ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜானகிராமன், பொன்.இரணியன் , ஐஎன்டியுசி மாவட்ட நிர்வாகிகள்ஜி.ஜெயபால், கே.தனசேகரன், எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் எஸ்.ஏ.கலாம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணை பொதுச் செயலாளர் இ.மோகனா, எல்பிஎப் நிர்வாகிகள் ஏ.முகமதுமீரா,டி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல சங்கங்களின் தலைவர்கள் மறியலில் ஈடுபட்டு கைதாகிறார்.

வேலூர்

வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் முரளி,எல்பிஎப் மாவட்ட செயலாளர் கலைநேசன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், முகமது அலிஜின்னா(ஐஎன்டியுசி) , கா.வெ. திருப்பதி (எச்எம்எஸ்)ஆகியோர் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர். இதேகோரிக்கையை வலியுறுத்திக் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகிலும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சபீர் அகமத்ஏஐடியுசி நசீர் ஐஎன்டியுசி ரவி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டதுணை தலைவர் அருள் சீனிவாசன், ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி அசின், பெருமாள், சுந்தரம் பிடி சங்க செயலாளர்மணிமாறன், சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆவடி ஓசிஎப் ஆலை ஆர்ப்பாட்டம்

படைத்துறை உடை தொழிற்சாலை தொழிலாளர்கள் சங்கம், படைத்துறை உடை தொழிற்சாலை தொழிலாளர்முன்னேற்ற சங்கம், இந்திய தேசிய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆவடி ஓசிஎப் ஆலை வாயிலில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இதில் பொதுச்செய லாளர் சி.ஸ்ரீகுமார், தொமுச பொதுச்செயலாளர் சி.அசோக் குமார், ஏ.பாலமுருகன்(இதேதொச) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.