தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி டில்லி போராட்டத்திற்கு ஆதரவாய் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 11:33 pm
ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி டில்லி போராட்டத்திற்கு ஆதரவாய் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக்கோரி டில்லி போராட்டத்திற்கு ஆதரவாய் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 20- நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், அறவழி போராட்டம் மேற்கொண்ட சோனம் வாங்சுங்கை வலுக்கட்டாயமாக கைது செய்த ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கையை கண்டித்து, இந்திய தொழிற் சங்க மையம், விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து திங்களன்று ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் சி. கலாவதி தலைமை வகித்தார். சிஐ டியு மாநிலதுணைத்தலைவர் சி. நாகரா சன், விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் சோ. அருச்சுனன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச்செய லாளர் எம். முத்து ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் வட்டச் செயலாளர் பி.கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்து உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே. மனோகரன் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர். பழனிச்சாமி, மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.தினேஷ் ராஜா, மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் அகமது ஜூல் பிகர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பி. ஆனந்த்ராஜ் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். இதில் திரளானோர் பங் கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் அ.தங்கராசு தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன், செயலாளர் என்.வேலுச்சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சரவணன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் செல்வராணி, விதொச மாவட்டச் செயலாளர் சி.துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர். ஈரோடு ஈரோடு, சூரம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் த.நவீன் தலைமை வகித்தார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ.அருந்ததி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மூத்த தோழர் எம்.அண்ணாதுரை, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.லலிதா உள்ளிட்ட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். திருப்பூர் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் நிரூபன் சக்கரவர்த்தி தலைமை ஏற்றார். மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் மணி கண்டன், மாதர் சங்க மாவட்டச்செயலா ளர் சி.பானுமதி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் அ.பஞ்சலிங்கம், சிஐடியு வின் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். சேலம் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் கே. பெருமா தலைமை வகித்தார். இதில், மாவட்டச் செயலாளர் எஸ். எம். தேவி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி. பெரியசாமி, மாணவர் சங்க கிளை தலை வர் தவசி, மாற்றுத்திறனாளிகள் சங்க தாலுகா செயலாளர் காளிதாஸ், விவ சாயிகள் சங்க தலைவர் ராமசாமி, விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் எம். ரங்கசாமி உள்ளிட்டு பலர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.