முந்தய பக்கம்

திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா

8 Dec 2025, 4:39 pm
திருப்பத்தூர் நகராட்சி  நிர்வாகத்தை கண்டித்து தர்ணா
<p><strong>திருப்பத்தூர் நகராட்சி &nbsp;நிர்வாகத்தை கண்டித்து தர்ணா</strong></p> <p>திருப்பத்தூர், டிச.8- திருப்பத்தூர் நக ராட்சிக்கு உட்பட்ட 36வது வார்டு திருமால் நகர் பகுதியில், கடந்த சில மாதங்களாகக் குடிநீருடன் பாதாள சாக்கடைக் கழிவு நீர் கலந்து வருவதாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புகார் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி ஆணையாளரிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள், 36வது வார்டு கவுன்சிலர் வெற்றிகொண்டான் தலை மையில் நகராட்சி அலுவ லகம் முன்பு தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வார காலத்திற்குள் இப்பிரச் சனை சரிசெய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த தன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram