தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க அரசின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு

21 Jan 2026, 3:58 pm
 அமெரிக்க அரசின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு
<p><strong>&nbsp;அமெரிக்க அரசின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு</strong></p> <p>சேலம், ஜன.21- இந்திய பொருட்களுக்கு 500 &nbsp;சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்க &nbsp;அரசின் ஆணவத்தை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் சேலத் தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண் ணெய் இறக்குமதி செய்து வரு கிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு &nbsp;தெரிவித்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என தொடர்ந்து இந்தியாவை மிரட்டி வருகிறது. இந்த மிரட்டலுக்கு பயந்து மோடி அரசு ரஷ்யாவிடம் வாங்கும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்து வருகிறது. இருப்பினும் இந்தியாவின் ஏற்று மதி பொருள்களுக்கு அமெரிக்கா &nbsp;50 சதவீதம் கூடுதல் வரி விதித்துள் ளது. இந்த வரி விதிப்பால் இந்தியா வின் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு &nbsp;ஏற்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் &nbsp;அனைத்திற்கும் 500 சதவீத வரி &nbsp;விதிக்கும் மசோதாவை அமெரிக்க &nbsp;அதிபர் ட்ரம்ப் அறிமுகம் செய்து, ஈரானுடன் வர்த்தகம் செய்து வரும் &nbsp;நாடுகள் மீது மேலும் 25 சதவீத &nbsp;கூடுதல் வரிவிதிப்பதாக ஆணவத் துடன் தெரிவித்துள்ளார். இது இந்திய நாட்டில் பாஸ்மதி அரிசி, பல வகைகள் பருப்பு வகை கள் ஆகியவற்றில் ஏற்றுமதி பாதிப் பதோடு வேளாண் பொருளாதாரத் தில் பெரும் நெருக்கடியை ஏற்படுத் தும். அதேபோல தமிழகத்தில் குறிப்பாக மேற்கு மாவட்டங்க ளில் உற்பத்தியாகும் ஜவுளி பின்ன லாடை வெள்ளி போன்றவற்றின் ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு பருத்தி இறக்குமதி மீது 11 சதவீதம் இறக்குமதி வரி, உள்நாட்டு பஞ்சு விலை உயர்வு நூல்களை உயர்வு &nbsp;தொடர்ச்சியாக ஏற்றுமதியும் பாதிக் கும் போது சங்கிலி தொடர்ச்சியாக நெருக்கடியாக மாறி உள்ளது. &nbsp;இந்நிலையில், நேரடியாக இந் தியாவை மிரட்டி வரும் ட்ரம்பின் நட வடிக்கையை கண்டித்து, ஒன்றிய மோடி அரசின் அமைதி காக்கும் வெளியுறவு கொள்கைக்கு இழைக் கப்படும் அநீதியை கண்டித்து புத னன்று சேலம் கோட்டை மைதானத் தில் இடது சாரி கட்சிகள் சார்பில் &nbsp;கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, சிபிஐ மாவட் டச் செயலாளர் ஏ.மோகன், சிபிஐ (எம்.எல்) விடுதலை கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமுவேல்ராஜ், செ.முத்து கண்ணன், சிபிஐ மாவட்ட துணை &nbsp;செயலாளர்கள் எம்.ராமன், ஏ.கந் தன், சிபிஐ (எம்எல்) மாநிலக்குழு உறுப்பினர் வி.அய்யந்துரை, பி. அன்பு ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.கலிய பெருமாள், எம்.கனகராஜ், என். பிர வின்குமார், கே. ராஜாத்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.