முந்தய பக்கம்

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

2 Apr 2026, 3:50 pm
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத  சட்டத் தொகுப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத &nbsp;சட்டத் தொகுப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>பெரம்பலூர், ஏப். 2- &nbsp;பெரம்பலூர் மாவட்ட அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன்பு, ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக, ஏப்ரல் 1, கருப்பு நாளாகக் கடைபிடித்து கோரிக்கை அட்டைகளை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். இதில், தொழிலாளர்கள் நல திருத்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் எல்.பி.எப் மாவட்ட கவுன்சில் தலைவர் கே.கே. குமார், ஹெச்.எம்.எஸ். மாவட்ட நிர்வாகி நீலமேகம், ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். &nbsp;நிகழ்வில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் செல்வி, பெரியசாமி, ரெங்கராஜ், சிவக்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram