தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்

18 Feb 2026, 3:04 pm
ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
<p><strong>ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்</strong></p> <p>பெரம்பலூர், பிப்.18 - தமிழ்நாட்டில் மக்காச்சோள உற்பத்தியில் முன்னணி மாவட்டங் களில் ஒன்றான பெரம்பலூர் மாவட்டத் தில் தற்போது மக்காச்சோள அறு வடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. &nbsp;இந்நிலையில் நடப்பு ஆண்டு மக்காச்சோளத்திற்கு ஒன்றிய வேளாண் விலை நிர்ணய ஆணையம் குவிண்டால் ஒன்றுக்கு 2,400 ரூபாய் ஆதார விலையாக அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குவிண்டால் மக்காச்சோளத்தை அதிக பட்சமாக ரூ.1,600 கொடுத்து தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்ப னை கூடத்திற்கு வரும் வியாபாரி களும், சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ரூ.1,700-க்கு கீழ் மட்டுமே கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாவட்ட வேளாண் விளைபொருள் விற்பனை துறையினர் ஏற்பாடு செய்திருந்த விவ சாயிகள், வியாபாரிகளுட னான முத்தரப்பு பேச்சு &nbsp;வார்த்தையிலும் விவசாயி களின் கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்க வில்லை. இதைத் தொடர்ந்து மக் காச் சோளத்திற்கு குவிண் டால் ஒன்றுக்கு ரூ.2,400 கொள்முதல் விலை அறி வித்து, அதை நிறைவேற் றாத ஒன்றிய, மாநில அரசு களை கண்டித்து பெரம்ப லூரில் புதனன்று அனைத்து விவசாயிகள் சங்க கூட்ட மைப்பு சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் &nbsp;மாவட்டத் தலைவர் செல்ல துரை தலைமையில், பெரம் பலூர் மாவட்ட ஆட்சியர் &nbsp;அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தில் ஈடு பட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை அரசின் கவ னத்திற்கு சென்றடைய வேண்டி மக்காச்சோள கதிர்களை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்காச்சோ ளத்தை சாலையில் கொட் டிய பெண் விவசாயிகள் அதை சுற்றிவந்து ஒப்பாரி வைத்து, தங்கள் வேத னையை அரசுக்கு நூதன முறையில் தெரிவித்தனர். இதில் தமிழக விவசாயி கள் சங்க மாநிலச் செயலா ளர் ராஜசிதம்பரம், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் முகமது அலி, தமிழ்நாடு விவசாயி கள் (சிபிஎம்) மாவட்டச் &nbsp;செயலாளர் ஏ.கே. ராஜேந்தி ரன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க(சிபிஐ) மாவட்டச் செயலாளர் ஜெயராமன் &nbsp;உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.