தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘எஸ்.ஐ.ஆர்.’ சட்டத்திற்கு எதிரான போராட்டம்: அமைச்சர் தலைமையில் தீர்மானம்

9 Nov 2025, 4:12 pm
‘எஸ்.ஐ.ஆர்.’ சட்டத்திற்கு எதிரான போராட்டம்:  அமைச்சர் தலைமையில் தீர்மானம்
<p><strong>&lsquo;எஸ்.ஐ.ஆர்.&rsquo; சட்டத்திற்கு எதிரான போராட்டம்: &nbsp;அமைச்சர் தலைமையில் தீர்மானம்</strong></p> <p>சிதம்பரம், அக். 9 &ndash; சிதம்பரத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தலைமையில், மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான திரு. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி னார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், திரா விடர் கழக பொதுச்செயலாளர் சந்திர சேகரன், மதிமுக மாவட்டச் செயலாளர் குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் மணிவாச கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் முகமது இஸ்மாயில், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச் செல்வன், மாவட்டச் செயலாளர் அரங்கத் தமிழ் ஒளி, மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மாநில அமைப்புச் செயலாளர் வைபவ் வாண்டையார், தமிழக வாழ்வுரி மைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி, &nbsp;மனிதநேய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, எஸ்.ஐ.ஆர். (SIR - Special Intensive Revision) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் விவ காரம் குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத் தில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் திரளா கக் கலந்துகொண்டு, மிகப்பெரிய போராட்டமாக அமைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.