முந்தய பக்கம்

டாக்ரோஸ் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்

5 Feb 2026, 3:40 pm
டாக்ரோஸ் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்
<p><strong>டாக்ரோஸ் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்</strong></p> <p>கடலூர், பிப். 5- &nbsp;கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள டாக்ரோஸ் தொழிற்சாலை நிர்வாகம் தொழி லாளர்களை மிரட்டுவதைக் கண்டித்து, சிஐடியு சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. தொழிலாளர்களை வேறு மாநி லங்களுக்கு மாற்றுவதாக மிரட்டுவதைக் கைவிடக் கோரியும், தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்தக் கோரியும் இப்போர்ராட்டம் நடைபெற்றது. &nbsp;இந்தப் போராட்டத்திற்கு தலைவர் ஆர்.கோவிந்தன் தலைமை தாங்கினார். சசிகுமார், மகேஷ்குமார், பொன்னிதுரை, சங்கர், முத்துகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp;சிஐடியு மாவட்ட இணை செயலாளர் டி.ஜெயராமன் துவக்கி வைத்தார். மாநில துணைத்தலைவர் பி. கருப்பையன் உண்ணாநிலைப் போராட்டத்தை வாழ்த்தி பேசினார். சிப்காட் செயல் தலைவர் ஆர்.ஆளவந்தார், செயலாளர் பி.குமார், சிப்காட் தலைவர் ஆர். முரளிதரன், சோலார் செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து மாவட்டத் துணைத் தலைவர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் சிறப்புரை ஆற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram