தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆவேச போராட்டம்

12 Feb 2026, 4:57 pm
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆவேச போராட்டம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆவேச போராட்டம்

தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில்  ரயிலை மறித்த இளைஞர் பட்டாளம்

மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் சார்பில் வியழனன்று (பிப்.12) அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னையில் 7 மையங்களில் மறியல் நடைபெற்றது. சேப்பாக்கம் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் கோபிநாதன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் டானியல் ஜெயசிங், மாநிலச் செயலாளர் ஏ.விஜயகுமரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, பொருளாளர் த.ஏழுமலை உள்ளிட்டோர் பேசினர்.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் சார்பில் வியாழனன்று (பிப்.12) அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை எல்ஐசி அலுவலகம் முன்பு சென்னை காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் கே.கிரிதர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வி.ரமேஷ், அகில இந்திய எல்ஐசி ஊழியர் சம்மேளனத்தின் ஆனந்தன், காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச்செயலாளர் வி.ரமேஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அம்பத்தூரில் வியாழனன்று (பிப். 12) பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டப் பொருளாளர் மா.பூபாலன், மாவட்ட துணைத் தலைவர் பால்சாமி, மாவட்ட நிர்வாகிகள் பி.லூர்துசாமி, குணசேகரன, பி.மாரியப்பன், ஆர்.துரைசாமி (ஏஐடியுசி), முனுசாமி, மோகன் (ஏஐசிசிடியு), இப்ராகிம், அம்பேத்தேவன் (விசிக), ஸ்டீபன் (ஐஎன்டியுசி), இரா.கோபி (சிபிஎம்), இரா.விஜயகுமார் (சிபிஐ) உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.