தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

19 Dec 2025, 6:05 pm
செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சேலம், டிச.19- பணி நிரந்தரம் கோரி சென்னை யில் போராட்டத்தில் ஈடுபட்ட செவி லியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. எம்ஆர்பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும். பணி நிரந்தரம் செய்ய வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவி லியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களை காவல் துறையினர் அடாவடியாக கைது செய்துள்ள னர். இதனைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. அதன்ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட செவி லியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவனை முன்பு போராட் டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் பு.சுரேஷ் கண்டனவுரையாற்றி னார். நகர வட்ட கிளைச் செயலாளர் ஸ்ரீபதி வாழ்த்திப் பேசினார். இதில் வழங்கினார், தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் வெ. அர்த்தனாரி மற்றும் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்ட னர். கோவை கோவை ஆட்சியர் அலுவல கம் அருகே நடைபெற்ற காத்திருப் புப் போராட்டத்திற்கு, செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலை வர் ஆர்.ராமலட்சுமி தலைமை வகித் தார். மாவட்டப் பொருளாளர் ஆர். சிவப்பிரியா, வங்கி ஊழியர் சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.மகேஸ் வரன் ஆகியோர் கண்டன உரை யாற்றினார். அரசு ஊழியர் சங்க &nbsp;மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ரவி, கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலச் செயலாளர் பிரக லதா, வடக்கு வட்ட துணைத்தலை வர் எம்.நதியா உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட நிர்வாகி பியூலா நன்றி கூறி னார். &nbsp;தருமபுரி தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் ஏ.தெய்வானை, நிர்வாகிகள் பன்னீர், காசி, சத்து ணவு ஊழியர் சங்க தலைவர் சி. காவேரி மற்றும் திரளான செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.