தொழிலாளர் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
25 Nov 2025, 3:29 pm
<p><strong>தொழிலாளர் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>அவிநாசி, நவ.25- ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோத கொள்கையை கண்டித்து பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் நலனை காவு வாங்குவதே கொள்கையாக கொண்ட ஒன்றிய பாஜக அரசு, தொழிலாளர் நலச்சட்டங்களை சுறுக்கி நான்கு சட்டங்களாக மாற்றியுள்ளது. ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்த இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரப்பூர் வமாக உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, தொழிலாளர்கள் போராடிப்பெற்ற பல உரிமைகளை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் சார்பில் ஆர்ப்பாட்டம் வஞ்சி பாளையம், மங்கலம் உள்ளிட்ட பகு திகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. வஞ்சிபாளையத்தில் மாவட் டக்குழு உறுப்பினர் கார்த்தி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், சிஐடியு மாவட்டத் தலை வர் சம்பத், விசைத்தறி சம்மேளன மாநிலச் செயலாளர் முத்துசாமி மற்றும் முருகன் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்று உரையாற்றினர். மங்களத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் விசைத்தறி சங்கத்தின் மாவட்டச் தலைவர் வேலுச்சாமி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், விசைத்தறி சம்மேளனம் மாநிலச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் குப்பு சாமி, ஈஸ்வரன், விசைத்தறி சங்க மாநிலக்குழு உறுப்பினர் பழனி சாமி, எல்பிஎஃப் சங்க மாவட்டத் தலைவர் சிவசாமி, இடுவாய் முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கணேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோவை கோவை துடியலூரில் உள்ள டெக்ஸ்மோ, அக்குவாசப் நிறுவ னங்களின் வாயில் முன்பு இன்ஜினி யரிங் சங்கத்தின் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட் டத் தலைவர் எஸ்.பி.சுப்பிரமணி யம் தலைமை ஏற்றார். இதில், சங் கத்தின் பொதுச்செயலாளர் சி. துரைசாமி, பொருளாளர் ஏ.ஜி. சுப்பிரமணியம், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் வி.பெருமாள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகு தியில் சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் நவீன்சந்திரன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ் கண்டன உரை யாற்றினார். இதில், நிர்வாகிகள் என்.எல்.சுப்பிரமணி, ரத்தினி, நிதியா, நாகேந்திரன், லட்சுமி, ஜெயந்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.</p>
