ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு
9 Jul 2026, 11:40 pm
<p><strong>ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு</strong></p><p>கோவை, ஜூலை 9- சின்னவேடம்பட்டி ஏரிப்பகுதி யில் மாநகராட்சி சார்பில் அமைக் கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து, அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியி னர் சின்னவேடம்பட்டி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழனன்று போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை வடக்கு பகுதியில் நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சின்னவேடம்பட்டி ஏரி, அப் பகுதி மக்களின் நிலங்களை வழங்கி உருவாக்கப்பட்ட முக்கிய நன்னீர் நீர்த்தேக்கமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து சங் கனூர் பள்ளத்தாக்கு வழியாக வரும் வெள்ளநீரை கட்டுப்படுத்த வும், கோவை வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், குடிநீர் மற் றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த ஏரி உரு வாக்கப்பட்டது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 30 மில்லியன் கனஅடி வரை நன்னீரை சேமிக்கும் திறன் கொண்டதாகும். மேலும், அவிநாசி–அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துடன் இது இணைக்கப்பட்டுள்ளதால், எதிர் காலத்தில் பவானி ஆற்றிலிருந்து நன்னீர் பெறும் வாய்ப்பும் உள் ளது. இந்நிலையில், கோவை மாநக ராட்சியின் சுமார் 20 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து சின்னவேடம்பட்டி ஏரி யில் திறக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநக ராட்சியின் இந்த நடவடிக்கை ஏரி உருவாக்கப்பட்ட அடிப்படை நோக் கத்திற்கே முரணானது. சுத்திகரிக் கப்பட்ட கழிவுநீரை நன்னீர் ஏரியில் தேக்குவதால் நிலத்தடி நீர் மாசு படுதல், துர்நாற்றம், பொதுசுகாதார பாதிப்பு, பல்லுயிர் வள இழப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுவதோடு, எதிர்காலத்தில் ஏரி யில் நன்னீரை சேமிக்கும் வாய்ப்பும் பறிபோகும். உலகளவில் சுத்தி கரிக்கப்பட்ட கழிவுநீரை இயற்கை நீர்வழிப்பாதைகளில் சுற்றுச்சூழ லுக்கு பாதிப்பு இல்லாத வகையி லேயே வெளியேற்றுவது நடை முறையாக உள்ள நிலையில், ஏரிக் குள் நிலையம் அமைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது. நீர்வளத்துறை அரசாணை (எண்: 50, நாள்: 30.05.2025) அடிப் படையில், பொதுமக்களின் ஆட்சே பனை இருந்தால் இத்திட்டத்தை கைவிடலாம் எனத் தெரிவிக்கப்பட் டுள்ள போதிலும், கடந்த ஓராண் டாக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விவசாயம், குடிநீர், கால் நடை மற்றும் சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்ற வேண்டும் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மார்க் சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் வலியு றுத்தினர். முன்னதாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநா பன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சிவசாமி, சிபிஎம் மாமன்ற குழுத் தலைவர் ராமமூர்த்தி, சிபிஎம் எஸ். எஸ்.குளம் மேற்கு ஒன்றியச் செய லாளர் சண்முகசுந்தரம், திமுக பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சிவா (என்கிற) பழனிச்சாமி, மாமன்ற உறுப்பினர் கள் சுமதி, கவிதா மற்றும் மக்கள் தேசிய கட்சியின் மாவட்டத் தலை வர் ரமேஷ் (என்கிற) மயூரி நாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து அங்கு வந்த துணை ஆணையாளர்கள் குமரே சன், ராஜேஸ்வரி, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகன சுந் தரி, வடக்கு மண்டல உதவி செயற் பொறியாளர் சத்தியமூர்த்தி, வார்டு ஏ.ஐ கணேசன் ஆகிய அதிகாரிகள் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்ற னர்.</p>
