தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

11 Mar 2026, 4:32 pm
திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
<p><strong>திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்</strong></p> <p>கடலூர், மார்ச் 11- மனைப்பட்டா கேட்டு திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தைப் பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பாகக் குடியேறும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. &nbsp;திட்டக்குடி வட்டம் கருங்குழி தோப்பு, பெ.கொல்லத்தங்குறிச்சி, மணல்மேடு, அரங்கூர், கொடிக்கலம், மேட்டுத் தெரு ஆகிய கிராமங்களில் வசித்து வருகிற காட்டுநாயக்கன், மலைக்குறவர், அருந்த தியர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச மனைப்பட்டா கேட்டுப் பலமுறை மனு கொடுத்தும், காத்திருக்கும் மக்க ளுக்குக் குடிமனைப்பட்டா வழங்காமல் அலைக்கழிக்கும் திட்டக்குடி வட்டாட்சி யரின் அலட்சியப் போக்கைக் கண்டித்துப் பழங்குடி மக்கள் நலச் சங்கம் சார்பில் பெட்டி, பாய், படுக்கையோடு, பாத்திரம் பண்டத்தோடு குடியேறும் போராட்டம் நடைபெற்றது. பழங்குடி மக்கள் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, வட்டச் செயலாளர் வி.அன்பழகன், பழங்குடி மக்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆழ்வார், பொருளாளர் ரஞ்சிதா, துணைத் தலைவர் சத்யராஜ், துணைச் செயலாளர் சண்முகம், அம்சவள்ளி, ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சின்னதம்பி, வட்டப் பொரு ளாளர் ஹரிபாபு மற்றும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். வட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. &nbsp;இதில் ஒரு வாரத்திற்குள் கருங்குழி தோப்பு மக்க ளுக்குப் பட்டா வழங்கு வது என்றும், மீத முள்ள கிராமங்களுக்கு இடம் தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.