எஸ்சி,எஸ்டி ஆணைய தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு
21 minutes before
<p><strong>எஸ்சி,எஸ்டி ஆணைய தலைவர் நியமனத்திற்கு எதிர்ப்பு</strong></p><p>கோவை, நவ.23-தமிழ்நாடு எஸ்சி,எஸ்டி ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி எம்.ஆர்.முரளிதரனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு எஸ்சி- எஸ்டி ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி எம்.ஆர்.முரளிதரனை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் த.லெனின் பேசுகையில், “எம்.ஆர்.முரளிதரன் மணிப்பூர் மாநிலத்தின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்பு, மணிப்பூரில் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. 250க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிடும், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறினர். இவரது தீர்ப்பு தவறானது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கண்டித்தது. பழங்குடி, பட்டியிலன மக்களின் வரலாறு சமூக உறவு தொடர்பாக போதுமான புரிதலும், இல்லாத ஒருவரை மாநில எஸ்.சி- எஸ்.டி. ஆணையத்தின் தலைவராக நியமித்திருப்பது பொருத்தமற்றது, ஆபத்தானது. எனவே, எம்.ஆர்.முரளிதரன் நியமனத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மேலும், சமூக நீதி மதச்சார்பின்மைக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நீதிபதி ஒருவரை, ஆணையத்தின் தலைவராக நியமிக்க வேண்டும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் அஷ்ரப், கே.புருஷோத்தமன், சி.குழந்தைவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
