தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்

3 Feb 2026, 4:00 pm
கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்
<p><strong>கல்குவாரி அமைக்க எதிர்ப்பு: மக்கள் போராட்டம்&#39;=</strong></p> <p>கோபி, பிப்.3- நம்பியூர் அருகே கல்குவாரி அமைக்க ஆயத்தப்பணி களை தொடங்கியதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரி வித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள அஞ்சானூர் ஊராட்சிக்குட்பட்ட பனங்காட்டுபாளையத்தில் 150,க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இது வறட்சியான பகுதி என்பதால் &nbsp;மானவாரி விவசாயத்துடன் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு &nbsp;வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் &nbsp;பனங்காட்டுபாளையத்தில் தனியார் கல்குவாரி உரிமையா ளர் விவசாய தோட்டம் அமைப்பதாக கூறி அப்பகுதியில் 20 &nbsp;ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். சில &nbsp;மாதங்களுக்குப் பிறகு வாங்கிய விவசாய நிலத்தில் கல் &nbsp;குவாரி அமைப்பதற்கான அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத் திற்கு மனு அளித்திருந்தனர். இதனை அறிந்த பனங்காட்டு பாளையம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி &nbsp;எதிர்ப்பு தெரிவித்ததால் கல் குவாரி அமைக்கும் பணி கைவி டப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் &nbsp;கல்குவாரி உரிமையாளர் கல்குவாரி அமைக்க மற்றொரு கல்குவாரி உரிமையாளருக்கு குத்தகை ஒப்பந்தத்தின் அடிப் படையில் வழங்கி மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி யுள்ளனர். இதன் அடிப்படையில் பனங்காட்டுபாளையம் தனியார் விவசாய நிலத்தில் கல்குவாரி அமைக்க ஆயத்த பணிகளை &nbsp;தொடங்க ஜேசிபி டிப்பர் லாரி உள்ளிட்ட இயந்திரங்களு டன் செவ்வாயன்று கிராவல் மண் வெட்டி எடுக்க வந்த &nbsp;நிலையில், இதனை அறிந்த கிராம மக்கள் அப்பகுதி யில் கல்குவாரி அமைக்க ஆயத்தப் பணிகளை தொடங்கு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. நம்பியூர் பகுதி வறட்சியான பகுதியாகும் இப்பகுதியில் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்துகொண்டும் ஆடு, &nbsp;மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் அதிக அளவில் விவ சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் கல்குவாரி அமைந்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலத்தடி நீர் மாசடையும் டிப்பர் லாரிக ளால் அதிக அளவில் இருக்கும். எனவே கிராம மக்களின் வாழ் வாதாரம் பாதுகாக்க அரசு தனியார் கல்குவாரிக்கு அனுமதி &nbsp;வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.