புதுச்சேரி பாண்டெக்ஸ் மேலாண் இயக்குநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>புதுச்சேரி பாண்டெக்ஸ் மேலாண் இயக்குநரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>புதுச்சேரி, பிப்.17- பாண்டெக்ஸ் மேலாண் இயக்குநரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து சிஐடியு சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (பிப்.17) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கைத்தறி நெசவாளர்களுக்குத் தேவையான நூல் கொள்முதல் செய்ய வேண்டும், அரசுத் திட்டங்களுக்கான துணிகளைப் பாண்டெக்ஸ் மூலமே வாங்க வேண்டும், 72 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் மற்றும் ஊழியர்களின் இபிஎப் தொகையைச் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தட்டாஞ்சாவடி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், கவுரவத் தலைவர் முருகன், நிர்வாகிகள் ராமசாமி, தினேஷ், வைத்தியநாதன், காளிமுத்து, அழகப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
