முந்தய பக்கம்

பொய்வழக்கு போட்டு கைது செய்த போலீசுக்கு எதிர்ப்பு

27 Nov 2025, 3:11 pm
பொய்வழக்கு போட்டு கைது செய்த போலீசுக்கு எதிர்ப்பு
<p>கோவை, நவ.27- திருவாரூர் மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை கைது &nbsp;செய்து சிறையில் அடைத்த காவல் &nbsp;துறையினரை கண்டித்து கோவை யில் வியாழனன்று சிஐடியு ஆட்டோ &nbsp;தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனு மதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதியன்று சிஐடியு ஆட்டோ ஓட்டு நர்கள் ஆர்டிஓ அலுவலகம் அருகே &nbsp;போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட் டத்தை, ஒடுக்க போலீசார் முயன்று பின்னர், சமாதானம் ஏற்பட்ட நிலை யில் ஆட்டோ ஓட்டுநர்கள் கலைந்து &nbsp;சென்றனர். &nbsp;இந்நிலையில் கடந்த நவ.17 ஆம் தேதி நள்ளிரவில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தலைவர் &nbsp;ஹனிபா உள்ளிட்ட ஆட்டோ ஓட்டு நர்களை போலீசார் அராஜகமாக கைது செய்து சிறையில் அடைத்த னர். இது தமிழகம் முழுவதும் உள்ள &nbsp;ஆட்டோ ஓட்டுநர்களிடம் அதிர்ச்சி யையும் ஆவேசத்தையும் ஏற்படுத் தியது. இதன்தொடர்ச்சியாக, கோவை பி.எஸ்.என்.எல் தலைமை &nbsp;அலுவலம் அருகே சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் &nbsp;ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் &nbsp;இரா. செல்வம் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐ டியு ஆட்டோ தொழிலாளர் சம்மே ளனம் மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, மாவட்டச் செயலாளர் எம்.கே.முத்துக்குமார், &nbsp;மாவட்டப் &nbsp;பொருளாளர் எம்.மைக்கேல்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றி னர். இதில், ஏராளமான ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram