பென்சன் வேலிடேசன் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம்
19 Aug 2026, 10:08 pm
<p><strong>பென்சன் வேலிடேசன் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டம்</strong></p><p>விருதுநகர், ஆக.19-ஓய்வூதியர்களைப் பாதிக்கும் பென்சன் வேலிடேசன்–2025 சட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவ உதவித் தொகையாக குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம்வழங்க வேண்டும். ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திஎன்.சி.சி.பி.ஏ., எம்.சி.பி.ஏ. ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p><p>விருதுநகர் துணைப் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு கோவிந்தராஜ் தலைமைவகித்தார். அஞ்சல் அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த சண்முகநாதன், ஏஐபிடிபிஏ மாவட்டத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் வெ.குருசாமி கண்டன உரையாற்றினார்.ஏஐபிடிபிஏ. மாவட்டச் செயலாளர் புளுகாண்டி, மாவட்டப் பொருளாளர் எம்.பெருமாள்சாமி, தர்மராஜ், ராசய்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
