அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம்
9 Dec 2025, 4:25 pm
<p><strong>அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, டிச.9 - அடிப்படை பிரச்சனைகளை கண்டும் காணாமல் இருக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சிபிஎம் இராவத்தநல்லூர் கிளை கிராம பொதுமக்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்கராபுரம் ஒன்றியம், இராவத்தநல்லூர் கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமியர் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் மழை நீரும் வடிகால் வசதி முறை யாக ஏற்படுத்தாததால் கிராமத்தில் தேங்கி, துர்நாற்றம் வீசியதோடு வீடுகளுக்குள் போகும் அவல நிலையை கண்டித்தும். இங்குள்ள தெருக்கள் அனைத்திலும் கழிவு நீர் கால்வாய்க்கு முறையான வடிகால் வசதியுடன் கூடிய கால்வாய்,சிமெண்ட் ப சாலை,மின்விளக்கு அமைக்க கோரி யும்ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதால் ஏரியில் நீர் நிரம்பிய பின் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது எனவே ஏறி வாய்க்கால் ஆக்கிரமிப்பில் உள்ளதை அகற்றி வாய்க்காலை தூர்வாரி நீர் வெளியேறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் கிளைச் செயலாளர் எஸ்.ஜமீல்உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர்,மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன்,ஒன்றிய செயலாளர் செ.சிவாஜி,ஒன்றிய குழு க.பாஸ்கர்,லோகநாதன், ஜாகிராபி சரத்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஜான்பாஷா,ஜாபர்,ஜபருல்லாகான்,நிசார் ஆகிய முன்னிலை வகித்தனர் 200க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக கூறியதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.</p>
