ஆபாச நடனத்திற்கு எதிர்ப்பு
4 Feb 2026, 5:19 pm
<p><strong>ஆபாச நடனத்திற்கு எதிர்ப்பு</strong></p>
<p>சேலம், பிப்.4- முகம் சுழிக்கும் வகையில் நடைபெறும் ஆபாச நடனத்தை எதிர்த்து கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் புகழ்பெற்ற மேடை நிகழ்ச்சி கள் நடிகர்களின் மாதிரிகள் கொண்டு நடத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பாரம்பரியத்தை மீறி அநாகரீகமான ஆபாச நடனங்களை சிலர் நடத்தி வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி, கொங்கணா புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆபாச நடனங்கள் அதிக அளவில் நடத்துகின்றனர். மேடை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமோ எந்தவொரு சாதியையும் ஊக்கப்ப டுத்தும் பாடல்கள் ஒளிபரப்புக் கூடாது என உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதனை கண்டுகொள்ளாமல் காவல்துறை துணை யோடு ஆபாச நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. எனவே, விதிகளை மீறி அநாகரீகமாக நடத்தப் படும் ஆபாச நடனங்களை உடனடியாக தடுக்க வேண்டும். இதனை நடத்துபவர்கள் மீது உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலை ஞர்கள், அனைத்து கலைஞர்கள் நல சங்கம் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள் ளிட்ட பலர் புதனன்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p> </p>
