தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தரக்குறைவாக பேசும் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

12 Jan 2026, 7:20 am
தரக்குறைவாக பேசும் வடக்கு வட்டாரக்  கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
<p><strong>தரக்குறைவாக பேசும் வடக்கு வட்டாரக் &nbsp;கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருப்பூர், ஜன.12- திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் லோ.பூபா லன் ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் விரோதமாக தான்தோன்றித்தனமாக செயல்படுவதாகக் கூறி, தமிழ்நாடு &nbsp;கொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ டிக்கைக் குழு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. &nbsp;வடக்கு வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு திங்களன்று &nbsp;நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இது குறித்து ஆசிரியர்கள் பேசு கையில், கல்வி அலுவலர் லோ.பூபாலன், பரமசிவம்பாளை யம் பள்ளியை இழுத்து மூடுவேன் என்கிறார். பிரச்சனைகள் &nbsp;குறித்து ஆசிரியர்கள் சந்திக்க திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலகம் சென்றால் அலுவலகத்தில் அவர் இருப்ப தில்லை. அலுவலக நடைமுறைகளை தன் மனநிலைக்கு ஏற்ப &nbsp;மாற்றுகிறார். இதனால் கல்வித்துறை பணிகள் முடங்கி கிடக்கி றது. பள்ளிக்கு வராத பிள்ளைகளை வீட்டுக்குச் சென்று அழைத்து வருவதை ஆசிரியர் பணியே அல்ல. மாணவர்கள் &nbsp;வராததை ஆசிரியர்கள் கண்டு கொள்ளன்கூடாது என்கிறார். &nbsp;பிரச்சனை சார்ந்து சந்திக்க வரும் சங்கப் பொறுப்பாளர்கள் மீது காவல்துறையில் பொய்யான புகார் கொடுக்கிறார். பெண் &nbsp;ஆசிரியர்களை கற்றல் கற்பித்தல் பணிகளை செய்ய விடாமல், தான்தோன்றித்தனமாக அர்த்தமற்ற முறையில் &nbsp;பேசுவது, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுகிறார். பிச்சை &nbsp;எடுக்க வைப்பேன், வேலையை தொலைத்து விடுவேன் என &nbsp;அச்சுறுத்துகிறார். ஏற்கனவே திருவண்ணாமலையில் பெண் &nbsp;ஆசிரியர்களை தொடர்ந்து ஏளனமாக. மரியாதைக்குறை வாக பேசியது உள்ளிட்ட செயல்பாட்டால் அங்கிருந்து பணி &nbsp;மாறுதலாகி இங்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. &nbsp;எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். &nbsp;இல்லாவிட்டால் ஜன.30 ஆம் தேதி திருப்பூர் வடக்கு வட்டாரக்கல்வி &nbsp;அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் &nbsp;என தெரிவித்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நௌசாத் தலைமை &nbsp;வகித்தார். டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் ர.பாலசுப்பி ரமணியன், பா.ரவிக்குமார், நாகராஜ், கணேஷ்குமார், எஸ். மோகன், கி.ராஜசேகர் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.