முந்தய பக்கம்

குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து போராட்டம்

4 Mar 2026, 5:01 pm
குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து போராட்டம்
<p><strong>குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து போராட்டம்</strong></p> <p>நாமக்கல், மார்ச் 4- குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து, எலச்சிபாளையம் வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றியம், லத்து வாடி கிராமம், செலமகவுண்டம் பாளையம் காட்டுசாலை பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் &nbsp;விநியோகம் செய்யப்பட்டு வந்தது. &nbsp;தற்போது குடிநீர் குழாய்கள் புதி தாக அமைத்து வரும் நிலையில், &nbsp;ஏற்கனவே இருந்த குடிநீர் இணைப்பு கள் துண்டிக்கப்பட்டுவிட்டது. இத னால் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பலமுறை மாவட்ட &nbsp;ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவ லர், ஊராட்சி அதிகாரிகளுக்கு மனுக் கள் அளிக்கப்பட்டும், கடந்த ஆறு மாத காலமாக எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொது மக்கள் செவ்வாயன்று எலச்சிபாளை யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஊராட்சி மன்ற &nbsp;முன்னாள் துணைத்தலைவர் பூஷன், &nbsp;முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ் &nbsp;உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து எலச்சிபாளையம் காவல் ஆய்வாளர் பாலாஜி ரமணன், &nbsp;வட்டார வளர்ச்சி அலுவலர் பாலவி நாயகர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜ் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் இணைப்புகள் வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram