முந்தய பக்கம்

பத்திரம் வழங்காததை கண்டித்து போராட்டம்

30 Mar 2026, 3:40 pm
பத்திரம் வழங்காததை கண்டித்து போராட்டம்
<p><strong>பத்திரம் வழங்காததை கண்டித்து போராட்டம்</strong></p> <p>கோவை, மார்ச் 30- வீடு ஒதுக்கீடு செய்து 33 ஆண்டுகளாகியும் விற்பனை &nbsp;பத்திரம் வழங்காததை கண்டித்து கணபதி மாநகர் வீட்டு &nbsp;வசதி வாரிய குடியிருப்பில் வசிப்போர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, கணபதி மாநகர் தமிழ்நாடு வீட்டு வசதி &nbsp;வாரிய குடியிருப்பில் 1005 குடியிருப்புகள் உள்ளது. &nbsp;இந்த குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து 33 &nbsp;ஆண்டுகள் ஆகியும் இன்னும் 125 வீட்டு உரிமை யாளர்களுக்கு வீட்டிற்க்கான விற்பனை பத்திரம் வழங்க வில்லை. இதர வீட்டு உரிமையாளர்களிடம் அதிகாரி களின் தவறான கணக்கீட்டால் கூடுதலாக தொகையை பெற்றுள்ளனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வீட்டு உரிமையாளர்களுக்கு சாதக மாக தீர்ப்பு கிடைத்தும், வீட்டு வசதி வாரியம் நீதி மன்ற தீர்ப்பின்படி அதிகப்படியாக வசூலித்த தொகை களை திருப்பித் தரவில்லை. இந்நிலையில், விற்பனை பத்திரம் வழங்காததை கண்டித்தும், கூடுதலாக கட்டப்பட்ட தொகையை திரும்பத் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று கணபதி மாநகர் வீட்டு உரிமை யாளர்கள் கூட்டுக் குழு சார்பில் கோவை ஹவுசிங் யூனிட் &nbsp;அலுவலகத்தில் திங்களன்று காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதில் கூட்டுக் குழுவின் தலைவர் கே.ஜெயச்சந்தி ரன், செயலாளர் எம்.ஏழுமலை, பொருளாளர் பி.சுப்ர மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram