தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏழைகளின் உணவு உரிமையைப் பறிக்கும் மோடி அரசு ‘தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு’ எதிராக சிஐடியு, விவசாய சங்கம் உள்ளிட்ட 4 அமைப்புகள் நாடு தழுவிய போராட்ட அறைகூவல்!

8 Jul 2026, 8:50 pm
ஏழைகளின் உணவு உரிமையைப் பறிக்கும் மோடி அரசு ‘தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு’ எதிராக சிஐடியு, விவசாய சங்கம் உள்ளிட்ட 4 அமைப்புகள் நாடு தழுவிய போராட்ட அறைகூவல்!

ஏழைகளின் உணவு உரிமையைப் பறிக்கும் மோடி அரசு ‘தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு’ எதிராக சிஐடியு, விவசாய சங்கம் உள்ளிட்ட 4 அமைப்புகள் நாடு தழுவிய போராட்ட அறைகூவல்!

புதுதில்லி, ஜூலை 8 - நாட்டின் மிக விளிம்புநிலை ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் (NFSA) ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொண்டுவரத் துடிக்கும் மக்கள் விரோ தத் திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய அளவில் பிரம்மாண்ட கூட்டுப் போராட்டங்களை நடத்த நான்கு முக்கிய அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம், அகில இந்திய விவ சாயிகள் சங்கம் மற்றும் இந்திய தொழிற் சங்க மையம் (CITU) ஆகிய வற்றின் அகில இந்தியப் பொதுச்செய லாளர்களான பி. வெங்கட், கனினிகா கோஷ், விஜூ கிருஷ்ணன், எளமரம் கரீம் ஆகியோர் இணைந்து இந்த முக்கிய கூட்டு அறிக்கையை வெளி யிட்டுள்ளனர்.

ரேஷன் கோட்டாவைச் சுருக்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சி

ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச் சகம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய ‘தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்த மசோ தா’, தற்போது குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்படும் 35 கிலோ ரேஷன் உணவுப் பாதுகாப்பு அளவை, நபர் ஒரு வருக்கு வெறும் 7 கிலோவாகக் குறைக்க பரிந்துரைக்கிறது. இத்துடன், ஒரு குடும்பத்திற்கான அதிகபட்ச வரம்பை 35 கிலோவாகவே முடக்கியும் வைத்துள்ளது. அரசின் இந்த விசித்திரமான தர்க்கம் அப்பட்டமான ஏமாற்று வேலை என்று வர்க்க அமைப்புகள் சாடியுள்ளன. சிறிய மற்றும் பெரிய குடும்பங்களுக்கு இடையே சமமான விநியோகத்தை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை என அரசு கூறுவது ஒரு பொருத்தமற்ற வாத மாகும். புதிய விதியின்படி, 5 உறுப்பி னர்களுக்கும் மேல் உள்ள ஏழைக் குடும்பங்களில், தலா 7 கிலோ என்ற கணக்கீட்டின்படி பார்த்தால் ஒட்டு மொத்தப் பங்கு மிகக் கடுமையாகக் குறையும். ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக்குவதுதான் மோடி அரசின் ‘சமத்துவக் கொள்கை’ போலும் என்று அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. ஏற்கெனவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ICMR) பழைய பரிந்துரைகளின்படியே, ஒரு மனிதரின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோ க்கியத்திற்கும் மாதத்திற்கு தலா 14 கிலோ உணவு தானியங்கள் தேவை என வரையறுக்கப்பட்டுள்ளது. ஊட்டச் சத்து நிபுணர்களும், மருத்துவ வல்லு நர்களும் தற்போதைய 35 கிலோ அளவே போதாது என்று கூறி வரும் நிலையில், கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கும் மோடி அரசு, ஏழைகளுக்கான உணவு மானியத்தை வெட்டிச் சுருக்கப் பார்ப்பது அதன் அப்பட்டமான வர்க்கப் பாசத்தையே காட்டுகிறது.

அந்த்யோதயா குடும்பங்களின் வாழ்வாதாரச் சிதைவு

தற்போது நாடு முழுவதும் 236.9 லட்சம் ‘அந்த்யோதயா’ (AAY) குடும் பங்களைச் சேர்ந்த 939.4 லட்சம் ஏழை மக்கள் தங்களின் உயிர்வாழ்விற் காக இந்த ரேஷன் திட்டத்தையே முழு மையாக நம்பியுள்ளனர். இந்தத் திட்ட த்தின் பயனாளிகளில் பெரும்பாலோர் முறைசாரா தொழிலாளர்கள், பாரம்பரி யக் கைவினைஞர்கள், விவசாயத் தொழிலாளர்கள், நிலமற்ற கூலிகள், தலித்துகள், ஆதிவாசிகள், முதிய வர்கள், ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வீடற்ற விளிம்பு நிலை மக்கள் ஆவர். பாஜக அரசின் தவறான பொருளா தாரக் கொள்கைகளால் முறையான மருத்துவ வசதியோ, நிரந்தர வேலை வாய்ப்போ, சமூகப் பாதுகாப்போ இல்லாத இந்த ஒடுக்கப்பட்ட சமூகங் களுக்கு, இரண்டு வேளை கஞ்சி கிடைப்பதற்கான ஒரே வாழ்வாதாரமாக விளங்கும் ரேஷன் அரிசியைப் பறிக்க ஒன்றிய அரசு சூழ்ச்சி செய்கிறது.

10 கோடி மக்கள் புறக்கணிப்பு: பசியின் பிடியில் இந்தியக் குழந்தைகள்

தற்போது அமலில் உள்ள 2013-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டமே பல குறைபாடுகளைக் கொண்டுள் ளது. இச்சட்டத்தின் கீழ் வழங்கப்ப டும் மானிய விலை உணவுக்கான கோட்டா, இன்னும் 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்ப டையிலேயே வழங்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் நாட்டின் மக்கள் தொகை கணிசமாக உயர்ந்துவிட்ட சூழ லில், முறையான தரவுப் புதுப்பித்தல் இல்லாததால், சுமார் 10 கோடிக்கும் அதிகமான தகுதியான ஏழைகள் பொது விநியோகத் திட்டத்திலிருந்து (PDS) முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள தாகப் பொருளாதார அறிஞர்களான ரீத்திகா கேரா, ஜீன் ட்ரெஸ் மற்றும் மேக்னா முங்கிகர் ஆகியோரின் 2021-ஆம் ஆண்டு ஆய்வு எச்சரிக்கிறது. ஆர்எஸ்எஸ் - பாஜக கூட்டணிக்கு வறுமை, பசி, உணவுப் பாதுகாப்பு குறித்த எவ்வித அடிப்படைப் புரித லும் இல்லை. தங்களின் வாக்கு வங்கிக் கான திட்டங்களை மட்டுமே இலக்கு வைக்கும் இந்த அரசின் லட்சணம், தேசிய குடும்ப சுகாதாரக் கணக் கெடுப்பு (NFHS 2019-21) தரவுகளில் அம்பலமாகியுள்ளது. இந்தியாவில் 35.5% குழந்தைகள் முறையான வளர்ச்சி யின்றியும், 32.1 % குழந்தைகள் குறைந்த எடையுடனும், 6-59 மாதங்களுக்குட்பட்ட 67.1 % குழந்தைகள் கடுமையான ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையான கலோரி உணவுகள் மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் சூழலில், பொதுக் கருவூலப் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரா ளமாக வாரி இறைப்பதற்காக ஏழை களின் வயிற்றில் அடிக்கும் செயலை அனுமதிக்க முடியாது என மேற்கண்ட இடதுசாரி வர்க்க -வெகுஜன அமைப்பு கள் தங்கள் கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன. முக்கியக் கோரிக்கைகள் 1. தேசிய உணவுப் பாதுகாப்பு திருத்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

2. ரேஷன் விநியோகத்தை அனை வருக்கும் பொதுவானதாக (Univer sal PDS) மாற்றி, ஆரோக்கியமான கலோரித் தேவைகள் மற்றும் அனை த்து அத்தியாவசியப் பொருட்களை யும் உள்ளடக்க வேண்டும்.

3. தற்போதைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப உணவுப் பாது காப்புச் சட்டத்தின் வரம்பை உடனடி யாக மாற்றியமைக்க வேண்டும்; தகு தியுடைய எவரையும் திட்டத்தி லிருந்து விலக்கக் கூடாது.

ஏழை எளிய மக்களின், குறிப்பாக கிராமப்புற தலித், ஆதிவாசி மற்றும் உழைக்கும் பெண்களின் வாழ்வுரிமை யைப் பறிக்கும் இந்த மக்கள் விரோதச் சட்டத்திற்கு எதிராக, ஒட்டுமொத்த உழை க்கும் மக்களும், வர்க்க அமைப்புகளின் தோழர்களும் லட்சக்கணக்கில் வீதிகளில் இறங்கிப் பேராடி மோடி அரசைப் பணிய வைக்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர், மாதர், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் சிஐடியு ஆகிய அமைப்புகள் கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளன. தி லெப்ட் வியூஸ்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.