நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 11:44 pm
<p><strong>நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்</strong></p><p>நீட் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவரைப்பேட்டையில் வாலிபர் சங்கத்தின் கவரைப்பேட்டை பகுதி செயலாளர் வசந்த் பௌத்த தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சஞ்சய்குமார், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன், மாவட்ட செயலாளர் வி.வினாயகமூர்த்தி, கவரைப்பேட்டை பகுதி நிர்வாகிகள் டிக்சன், பாபி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, பொருளாளர் எஸ்.நாகலட்சுமி, விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் வட்டத் தலைவர் இ.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ப.லோகநாதன், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனவுரையாற்றினர்.</p>
